சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்..!அர்சத்தியன்ஸ் திருவிழா - 2019.
சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் பழைய மாணர்கள் சங்கத்தின் தலைவரும் அதிபருமான M.A. றஹீம் (Principal) அவர்களின் வழிகாட்டலிலும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் நோக்கத்தின் அடிப்படையில் #அர்சத்தியன்ஸ் #திருவிழா" நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பகலிரவு கிரிகட் விளையாட்டுப் போட்டி, இரவு நேர கரப்பந்தாட்டப் போட்டி, மரநடுகை வேலைத்திட்டம், இரத்ததான முகம் என பல நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாடசாலையின் இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ சேட்டும் வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது வெறுமனே ஒரு களியாட்ட நிகழ்வாக மட்டுமல்லாது இதன் பின்னனியில் பாடசாலையின் அத்தியவசியமான சில அபிவிருத்திப் பணிகளுக்காக பழைய மாணவர்களின் பங்களிப்பையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனவே இந்நிகழ்விற்கு அனைத்துப் பழைய மாணவர்களும் தங்களின் மேலான பங்களிப்பினை வழங்குவதோடு தங்களின் நிதி உதவிகளையும் செய்யமுடியும்.
விசேடமாக வௌிநாடுகளில் உள்ள சகோதரர்களும் கீழ்காணும் லிங்கிணுாடாக பதிவுகளை மேற்கொள்வதோடு தங்களது நிதிகளை கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்புகொண்டு வழங்கமுடியும். அதேபோன்று தங்களது ரீ சேட்டினை கொரியர் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு
0776213383, 0779795450, 0777654503, 0763095296
0776213383, 0779795450, 0777654503, 0763095296
பழயை மாணவர்கள் சங்கம்
அல் அர்சத் மகா வித்தியாலயம்
சம்மாந்துறை
அல் அர்சத் மகா வித்தியாலயம்
சம்மாந்துறை
No comments