• Breaking News

  அம்பாறை மாவட்ட அரசியலில் சம்மாந்துறை தொகுதியானது எதனால் முக்கியம் பெறுகின்றது..?

  சுபைடீன் - சம்மாந்துறை.

  ஒரு இனத்தினுடைய தேசிய அடையாளத்தினை உறுதிப்படுத்துகின்ற முக்கியமான காரணியாக அந்த இனத்தினுடைய இருப்பிடமும் அதனை சார்ந்த நிலப்பரப்பினை மையப்படுத்திய விடயமுமே முக்கிய அரசியல் சாசனமாக கருதப்படுகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் இதனை ஒரு கணம் பார்க்குமிடத்து பேறறிஞர் அல்லாம இக்பாலினுடைய கருதின்படி பூர்வீக இருப்பிடத்தினை மையப்படுத்திய நிலப்பரப்பானது இஸ்லாமிய சமூகத்தின் அடையாளத்தினை உறுத்திப்படுத்துவதற்கு அடிப்படை காரணிகளில் ஒன்றாக அமைவதோடு, அது உலக அளவில் ஏனைய இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகவும் அமைகின்றது.

  அந்த வகையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டு காணப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் சம்மாந்துறை தொகுதியானது முஸ்லிம்களினுடைய அதிகப்படியான நிலப்பரப்பினை கொண்ட தொகுதியாக காணப்படுகின்ரது. இதன் காரணமாகவே சன நெரிசலுக்கும், இட பற்றாக்குறைக்கும் முகம் கொடுக்கும் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் அதனை அண்டிய ஏனைய கிராமங்களில் வாழுகின்ற முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கு தேவையான இருப்பிடத்தினை கருத்தில் கொண்டு சம்மாந்துறை தொகுதிக்கு இடம் பெயர்ந்தவர்களாகவும், அங்கே நிலங்களை கொள்வனவு செய்வதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

  இதனை சமகால அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இலங்கை முஸ்லிம்களுக்கான அரசியல் முகவரியினை கொடுத்த மக்கள் இயக்கமாகவும், இன்று வரைக்கும் முஸ்லிம்களுடைய ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்ற முஸ்லிம் காங்கிரசினுடைய தாயகமான அம்பாறை மாவட்டத்தில் பெரும் நிலப்பரப்பினையும் மக்கள் தொகையினையும் கொண்டு காணப்படும் சம்மாந்துறை தொகுதியானது அம்பாறை மாவட்டத்தின் அரசியலினையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் இஸ்தீர தன்மையினையும் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பெரும் தலைவர் அஸ்ரஃப் தொடக்கம் இன்று வரைக்கும் காணப்படும் அதே நேரத்தில் எதிர் கால அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத உண்மை என்பதில் மாற்றுக்கருத்திருக்க இடமில்லை.

  இந்த நிலையில் புதிய எல்லை நிர்ணையமாக இருந்தாலும் சரி, அம்பாறை மாவட்டத்தினை மையப்படுத்திய கரையோரமாவட்டம் அல்லது தென் கிழக்கு அலகு கோரிக்கையாக இருந்தாலும் அதிக நிலப்பரப்பினை கொண்ட சம்மாந்துறை தொகுதியே அதனை இறுதியில் உறுதிபடுத்துகின்ற சக்தியாக இருக்க போகின்றது. ஆகவே இவ்வாறான கோரிக்கைகளின் சாத்தியங்களும் அதனோடு சேர்ந்த இறுதி முடிவுகளும் முழுக்க முழுக்க அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சம்மாந்துறை தொகுதியினுடைய மக்கள் தொகையினையும், பெரும் நிலப்பரப்பினை சார்ந்த ஏனைய வளங்களை கொண்ட ஒரு பங்கீட்டு நிலைமையினை மையப்படுத்தியதாகவே அமையப்போகின்றது.

  எனவே முஸ்லிம்களுடைய ஏக பிரதி நிதிகளாகவும், இந்த நாட்டில் சுமார் முப்பது வருட காலமாக எந்த கட்சியினாலும் அசைக்க முடியாத முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கான அரசியலினை மேற் கொண்டு வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது சம்மாந்துறை தொகுதி மக்களுடைய அரசியல் ரீதியிலான விறுப்பு வெறுப்புக்களை சீர்தூக்கி பார்த்து தங்களுடைய அரசியல் நகர்வுகளையும், அரசியலுடன் சார்ந்த இன்ன பிற அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் சாதுரியமான முறையில் தூர நோக்கு சிந்தனையின் மறு வடிவமாக பிரதிபலித்து சிறந்த முடிவினை எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாய தேவை இருக்கின்றது.

  அந்த வகையில் எதிரே வருகின்ற மாகாண சபை தேர்தலில் சம்மாந்துறை தொகுதியினை அம்பாறை மாவட்டத்தின் அசைக்க முடியாத கோட்டையாகவும், குறித்த தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியல் பூச்சாண்டி காட்டி வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு சிம்ம சொற்பனமான அரசியல் ஆயுதமாகவும் மாற்றி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையும், கட்சியும், மற்றும் மாவட்டத்தில் செயற்படுகின்ற கட்சியின் அரசியல் முக்கியஸ்தர்களும் முன் வந்து ஒரே குடையின் கீழ் பிரதேச வாதம், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் முரண்பாட்டு அரசியலினை தூக்கி வீசி விட்டு ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad