• Breaking News

    மனைவியின் கடமைகள்.....!


    அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும்,பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

    ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து 

    கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்' என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நபின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆதாரங்கள்: தப்ரானி, முஸ்னத் அஹ்மத்.

    கணவன் தாம்பத்யத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், வானவர்கள் விடியும் வரை அப்பெண்ணை சபித்துக்கொண்டேஇருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

    நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், புகாரி, அபூதாவூத், தாரமி,



    ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad