• Breaking News

    தம்பியார் நூலின் வெளியீட்டு விழா.


    (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

    கவிஞர் டாக்டர் அசாத் எம் ஹனிபா எழுதியது மூன்றாவது கவிதை நூல் தம்பியார் நூலின் வெளியீட்டு விழா Colombo Tamil Sangam சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18) ஞாயிற்றுக் கிழமை காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் இடம்பெற்றது.

    இந்தநிகழ்வின் பிரதம அதிதியாக பேராசிரியர் சபா ஜெயராசா கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக ஞானம் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போடியத்தின் தலைவருமான என். எம். அமீன், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், இலங்கை கிளையின் தலைவர் செந்தில் வேவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.எம். ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது, நூலின் முதல் நகல் இலக்கிய புரவலர் ஹஷிம் உமர் பெற்றுக் கொண்டார். தம்பியார் நூலின் நயவுரையை சிரேஷ்ட எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான அஷரஃப் சிஹப்தின் நிகழ்த்தியதோடு, காவ்யாபிமானி கலைவாதி கலீல் கவி கவிதை பாடினார் பாடினார். வசந்தம் எப்.எம். வானொலி அறிவிப்பாளர் கவிஞர் ஏ.எம். அஸ்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்வில், பிரதம அதிதி நூலாசிரியர் பொன்னடை போர்த்தி கௌரவித்த அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரர் சார்பாக அதன் தலைவர் என்.எம். அமீனினால் டாக்டர் மற்றும் கவிஞருமான அசாத் எம் ஹனிபா பொன்னடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

    மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக நூலாசிரியரோடு பணிபுரியும் டாக்டர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். பகல் பாஷனோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad