• Breaking News

    இந்தியப் பிரதமர் மோடி உண்ணாவிரதம்?


    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடங்கியதை கண்டிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

     நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.ஆந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். 

    இதேபோல், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி.க்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தை முன்வைத்தும், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை முன்வைத்தும் அமளியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன.

     குறிப்பாக, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது பகுதியில் இரு அவைகளும் ஒரு நாள் கூட முழுமையாக நடக்கவில்லை.இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad