• Breaking News

    DENGUE நோயை தடுக்க ‘WOLBACHIA’ பாக்டீரியா இலங்கையில் அறிமுகம்...!



    இலங்கையில் ஜனவரி முதல் 17 நாட்கள் சுமார் 2.982 டெங்கு நோயாளிகள் கண்டு படிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

    ஏற்கனவே டெங்கு காய்ச்சல் ஆபத்து பகுதிகளாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், கல்முனை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று டெங்கு தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    வீடுகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், பணியிடங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டு இடங்கள், டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் ஆபத்து அதிகம் இருப்பதால் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் 30 நிமிடங்களாவது சுற்று சூழல் சுத்தம் செய்தல் நடவடிக்கைகளுக்கு ஒதுக்குமாறு Dengue நோய் தடுப்பு பிரிவு ஆலோசனை வழங்கி உள்ளது.


    காய்ச்சல் உடன்  தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் போன்ற அறிகுறிகள் ஏட்பட்டால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனையை பெறுமாறு   Dengue நோய் தடுப்பு பிரிவு ஆலோசனை வழங்கி உள்ளது.மேல் மாகாணத்தில் Dengue ஒழிப்புக்கு ஆயுதப்படைகள் மற்றும் போலீசார் உதவி நாடப்பட்டுள்ளது. இதட்காக ஏற்கனவே 700 போலீசார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.



    புள்ளி விவரப்படி இலங்கையில் 2017 இல் சுமார் 1,85,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 400 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.2017 இல் அறிவிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 41% ஆனோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

    இதற்கிடையில், இலங்கை ‘Wolbachia’ பாக்டீரியாவின் உதவியுடன் டெங்கு பரவுவதை தடுக்க ஆஸ்திரேலிய அரசசின் உதவியுடன் நீண்டகால பொறிமுறையை பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளது. இதை பரீச்சர்த்தமாக கொழும்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த அமைச்சரவை கடந்த 11 ஆம் திகதி கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

    இத்திட்டம் ஆஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

    டெங்கு வைரஸ் இன் வளர்ச்சியை தடுக்க ‘Wolbachia’ பாக்டீரியா பயன்படுத்த முடியும் என வெற்றிகரமாக ஆஸ்திரேலியாவில் மோனஷ் பல்கலைக்கழகம் சோதனை செய்து நிரூபித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
    Source:- http://www.bbc.com/sinhala/sri-lanka-42724169

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad