• Breaking News

  ஒலுவில் துறைமுகம் வரமா...? சாபமா..?


  ஒலுவில் கடலரிப்புக்கு காரணம் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணமே...! 

   எரியும் நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் ஒலுவில் கடலரிப்பு என்பது இன்று அரசியலாக்கப் பட்டுள்ளது. நமது மண்ணின் மீதான இயற்க்கைச் செயற்பாடான கடலரிப்புக்கு தலைவர் அஷ்ரப் அவர்களும் அவரது கட்சியும் இன்று காரணமாக்கப் பட்டுள்ளது.

   கடலரிப்புக்கான காரணம் ஒலுவில் துறைமுக நிர்மாணம் என கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில் தலைவர் அஷ்ரப் அவர்களை நிந்திக்கும் நிலையும் தற்போழுது எழுந்திருக்கின்றது. 

   இன்றய அதிகாலைப் பொழுதில் முகநூல் பதிவுகளைப் பார்க்கும் பொழுது ,, இந்த சமூகத்தின் மனோநிலையினை நினைத்து அதிகம் கவலை அடைந்தேன்... ஒலுவில் மண் என்பது மறைந்த தலைவர் அவர்களால் அதிகம் விரும்ப்பப்பட்ட மண்...அவரது அந்திம காலத்தை கழிக்க விரும்பிய மண்..அவரால் புதிய அறிமுகம் கொடுக்கப்பட்ட மண்....அவரால் சிறப்பிக்கப்பட்ட மண்...தான் அடங்க விரும்பிய மண்... தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது அமைச்சின் மூலம் அதிகம் செலவழித்துச் செதுக்கிய மண்... தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வருவதற்கு முன்னோடியாக இருந்த இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி சம்மாந்துறையில்தான் 1982ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

  இதனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை தலைவர் அஷ்ரப் அவர்கள் நிறுவ வந்தபோது அது அவர் பிறந்த சம்மாந்துறையில் நிறுவப்படுவதன் நியாயங்களில் ஒன்றாக ஏலவே சம்மாந்துறையில் இயங்கி வந்த இணைந்த பல்கலைக்கழக கல்லூரியை சிலர் சுட்டிக் காட்டினார். ஆனால் அஷ்ரப் அவர்கள் ஒலுவில் கிராமத்தையே தேர்வு செய்தார். ஒலுவில் துறைமுகத்தை அவர் கொண்டு வந்ததன் பின்னணியை சாதாரண மக்கள் விளங்காததால் ஆச்சரியம் இல்லை.

  ஆனால் படித்தவர்களும் அது குறித்து விளங்காமையும் அல்லது எழுதாமையும் எனக்குள்ளே மிகப்பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. துறைமுக நகரங்களின் செல்வச் செழிப்பினை அறியாத சமூகமாக நாம் இருக்கின்றோமா என எண்ணுகின்றேன். 200 ஏக்கர் பரப்புள்ள தலைநகரின் கடல் பரப்பினை மண் கொண்டு நிரப்பும் சக்தி இந்த நாட்டுக்கு இருக்கும் பொழுது துறைமுகக் கட்டுமானம் ஒன்றின் போதான கடல் அரிப்பினைத் தடுக்க முடியவில்லை என் எனும் வினா இன்னும் எழுப்பப் படாமல் இருப்பது வேதனை தருகின்றது. இந்தத் துறைமுகம் இந்த நாட்டு அரசாங்கத்தினால் அன்பளிப்பாகத் தரப்பட்ட ஒன்றல்ல. 

   அல்லது இந்தத் துறைமுகம் அன்றய அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்றுமல்ல. அல்லது தலைவர் அஷ்ரப் அவர்களிடம் ஒலுவில் மக்கள் முன்வைத்துக் கேட்ட கோரிக்கையுமல்ல. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், அவரது கனவுகளில் ஒன்றாயிருந்த தூரநோக்குள்ள அபிவிருத்தித் திட்டங்களில் இது முக்கியமானதாகும்..

  ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தத் துறைமுகம் மூடப்பட வேண்டும் என இன்று கூறப்படுவது நமது துரதிஷ்டமான காலம் என்றே கூற வேண்டும். ஒலுவில் கடலரிப்புக்கு யார் காரணம்...? 

   உண்மையில் இன்று எழுந்திருக்கின்ற ஆர்ப்பாட்டம் எப்போதோ எழுந்திருக்க வேண்டும்...எதற்க்காக எழுந்திருக்க வேண்டும்...? 

   துறைமுகத்தினை மூட வேண்டும் எனக் குரல் எழுப்புபவர்கள் இதுவரை காலமும் எங்கே இருந்தார்கள்..? துறைமுகத்தினை மூடுவது சிறந்ததா...? அல்லது அதனை முழுமையாக அபிவிருத்தி செய்வது சிறந்ததா...? துறைமுகத்தினை மூடிவிட்டால் கடலரிப்பு நின்றுவிடுமா...? 

  அதனால் ஏற்பட்ட இழப்புக்களை நிவர்த்தி செய்ய முடியுமா...? காலில் உள்ள காயத்துக்கு மருந்து செய்ய செய்ய மருந்து தெரியாதவர்கள் காயத்தை ஆற்ற முடியாது என்று காலை வெட்டுவது அறிவாகுமா...? போராடி நாட்டை வெற்றி கொள்ளப் போனவனுக்கு காயம் வந்து விட்டது..

  அது அவனின் குற்றமல்ல..ஆனால் காயத்துக்கு மருந்து செய்வது நமது வேலை...அதை நாம் செய்யாமல் விட்டு விட்டு போராடப் போனவனைக் குற்றம் காண்பது என்ன நியாயம்..? இதுதான் ஒலுவில் துறைமுகத்துக்கு நடந்திருக்கின்றது. ஒலுவில் துறைமுகம் என்பது தலைவர் அஷ்ரப் அவர்களால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய தேசிய அபிவிருத்தித் திட்டமாகும்.ஒரு புதிய துறைமுக உருவாக்கம் என்பது சாதாரணமான ஒரு விஷயமல்ல.

  ஒலுவில் துறைமுகத்தின் உருவாக்கப் பின்னணி என்பது இன்றய முஸ்லீம் அரசியல் தலைமைகள் சிலருக்குப் புரியவில்லை என்பதே எனது அபிப்பிராயம். தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மரணம் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளுக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

  அவரின் மரணத்துக்குப் பின்னர் அதனை முன்னெடுக்கும் திராணி நம்மவர்கள் எவருக்குமே இருக்கவில்லை என்பது அதைவிடப் பெரிய உண்மை. தலைவரின் மரணத்தின் பின்னர் காட்சியைக் காப்பாற்றும் பெரும் போராட்டம் இன்றய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பெரும் சவாலாக இன்றுவரை இருப்பது ஏன் எனும் வினாவுக்கு நாம் விடை காணவேண்டியுள்ளது. தலைவரின் மரணத்தின் பின்னர் தலைவர்களாக வந்தவர்களும் கிழக்கு மாகாணத்தின் தலைவர்களாக தங்களைத் தாங்களே பிரகடனித்துக் கொண்டவர்களும் ஏன் இந்தத் துறைமுகத்தைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை...?

   கிழக்கு மாகாணத்தின் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எவராலும் ஏன் இதற்க்கான தீர்வினைப் பெற முடியவில்லை..? மனசாட்சியுடன் பேசினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை நீங்கள் விடுதலை செய்தே ஆகவேண்டும்...? 

   யதார்த்தமான அணுகு முறையில் பார்த்தால் ஒலுவில் கடல் அரிப்புக்குப் பதில் கூற வேண்டியவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்ந்த கிழக்கின் அத்தனை அரசியல் தலைமைகளுமே. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற மரத்தின் நிழலில் இருந்த மக்களைக் கூறாக்கி ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தைப் பலவீனப்படுத்திய அத்தனை பேரும் இதற்குப் பதிலளித்தே ஆகவேண்டும். 

   ஆளும் அரசாங்கங்களின் செல்லப் பிள்ளையாக இருந்து கொண்டு முஸ்லீம் காங்கிரசின் தலைமையினைப் பலவீனப்படுத்தி தங்களை தலைவர்களாக முடிசூட்ட எடுத்த முயற்சிகள் முஸ்லீம் காங்கிரசின் மக்கள் சார்பான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கத் தேவையில்லை

   என அவர்கள் மாறிவந்தஅரசாங்கங்களுக்கு கொடுத்த நம்பிக்கைகள் முஸ்லீம் காங்கிரஸிடம் இருந்து மக்களை பிரிக்கும் பேரினவாத நிகழ்ச்சி நிரல்களுக்கு துணைபோய் அதன் கூலியாகப் பெற்றுக்கொண்ட பதவிகள் சலுகைகள் இப்படி இவை போன்ற காரணங்களே ஒலுவில் கடலரிப்புக்கு காரணங்களாகும்.. 

   இந்த நிமிடம் வரை ஒலுவில் மக்களுக்காக நியாயமாகப் போராடும் ஒரே ஒரு அரசியல் சக்தி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரினவாத இலங்கையின் அரசியல் களத்தில் சிறுப்பான்மையினர் தங்களது உரிமைகளை ஒன்றுபட்டு நிற்பதன் மூலமாகவே அடைந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்தே தலைவர் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கீழ் நம்மை ஒன்றுபடுத்தினார்.  அதனாலேதான் நாம் துறை முகம் பல்கலைக்கழகம் தொழில்வாய்ப்புக்கள் என சாதித்தோம்...அந்தப் பலம் அவரது மரணத்தின் பின்னர் சிதைக்கப்பட்ட பொழுது அவைகளை இழந்து தவிக்கிறோம்... இதைக்கூட புரிந்து கொள்ள இன்னும் சிரமப் படுகின்றோம்....

  By:Ranoos Muhammath Ismail 

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad