Breaking

Sunday

ஆசிரியர்கள் பாடசாலையில் சரியாக கற்பித்தால் Tuition கலாச்சாரத்தை ஒழித்து விடலாமா?


By : Ziyad Aia (வைத்தியர்)

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரவு நேர வகுப்புகளை விமர்சிப்பதாக ஆரம்பித்து கடைசியில் தனியார் வகுப்புகளுக்கும் அதில் கற்பிக்கும் ஆசிரியர்களையும் விமர்சிக்கிறார்கள்.

இதில் முன்னோடியாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் அதே தனியார் வகுப்புகளுக்கு சென்று சிறந்த பெறுபேறுகளை பெற்று பட்டதாரியாக ஆனவர்களே.


உண்மையில் Tuition Class களின் யதார்த்தம் என்ன?

சில வருடங்களுக்கு முன்னர் தனியார் வகுப்புகள் Year 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும், Year 9 to 11 வரை கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும், A/L ஐ பொறுத்தவரை எல்லா பாடங்களுக்கும் Tuition Class கள் இருந்தன.


இதில் A/L ஐ பொறுத்தவரை தனியார் வகுப்புகள் இன்றியமையாதவை.

 
01. A/L ஐ பொறுத்தவரை பாடத்திட்டமே உள்ளது. பாடப் புத்தகங்கள் இல்லை. எனவே 100% ஆசிரியரின் வழிகாட்டலிலேயே தங்கியுள்ளது.( பல பாட குறிப்புகள் சில ஆசிரியரின் பெயர் கொண்டு அழைக்கப்படும் அளவுக்கு செல்வாக்கு உள்ளது. )


02. A/L என்பது ஒரு போட்டிப் பரீட்சை. மாணவர்கள் போட்டி போட்டு படித்து முன்னேற வேண்டிய நிலைமை.இங்கே கற்பித்தல் என்பது ஒரு கலை. அது எல்லோராலும் சிறப்பாக செய்ய முடியாது.


அந்த கலையில் சிறந்தவர்களாலேயே தனியார் வகுப்புகள் கொடுக்க முடியும். அவர்களிடமே அதிக மாணவர்களும் செல்வார்கள்.


A/L படிக்கும் ஒரு மாணவனுக்கு அந்த பாடசாலையில் எந்த ஆசிரியரோ அவரே கற்பிப்பார். அந்த ஆசிரியர் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு புரிய வைத்தாலும் அவருடைய புரிய வைக்கும் ஆற்றலை பொறுத்து மாணவர்களின் புரிதல் அமையும்.

புரியவைக்கும் கலையில் அந்த ஆசிரியர் நிபுணத்துவம் இல்லையென்றால் அந்த மாணவனுக்கு இருக்கும் அடுத்த வழிதான் (Choice) தனியார் வகுப்பு. தனக்கு யார் மூலம் சிறப்பாக புரியவைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறதோ அதனை அவன் தெரிவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.


இங்கே கேட்கலாம் அப்படி சிறப்பாக புரியவைக்கும் ஆற்றல் இல்லாத ஆசிரியர்களை ஏன் நியமிக்கிறார்கள்? என்று. புரிதல் வேறு. புரியவைத்தல் வேறு.ஒரு ஆசிரியரின் புரிதலை (Qualifications) அவர் அத்துறைக்கு வருவதற்கு முன்னர் பரீட்சைகள், assignment, interview மூலம் அளவு செய்யலாம் (Objective). ஆனால் புரியவைத்தலை (Ability of Teaching) அளவிடுவது கடினம் (Objective). புரிய வைத்தல் என்பது ஒரு கலை.


தற்போதைய மாகாண கல்விப் பணிப்பாளர் Mansoor Sir ஆசிரியர்களை பார்த்து அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் தான் "நீ சிறந்த ஒரு ஆசிரியனாக இருந்தால் டியூஷன் நடத்திக் காட்டு." இதனை ஆழமாக யோசித்தால் அர்த்தம் புரியும்.


அதட்காக Tuition Class கொடுக்காத ஆசிரியர்கள் எல்லாம் சிறப்பாக கட்பிக்க தெரியாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. Tuition Class என்பது அவர்களது Choice. அவர்களுக்கு விருப்பமின்மை , நேரமின்மை or வேறு துறைகளில் நாட்டம் இருக்கலாம்.

தகைமை உள்ளவர்கள் எல்லோரும் சிறப்பாக கற்பிப்பார்கள் என்றால் சிறந்த Batting Couch ஆக Schin Tendulkar உம் சனத் ஜெயசூரிய வும் தான் இருக்க வேண்டும்.
ஆக மாணவர்களுக்கிடையிலான போட்டியை நிவர்த்தி செய்வதற்கு உரிய ஒரு தெரிவதுதான் தனியார் வகுப்புகள். ஒரு பாடசாலையில் 100 ஆசிரியர்கள் என்றால் அதில் தனியார் வகுப்பு நடத்துபவர்கள் 20 கூட இருக்காது.


(ஒரு சில ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்கு மாணவர்களை அழைக்குமுகமாக சில பிழையான வழிகளை கையாள்வது கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் மட்டம் தட்டிப் பேசுவது முறையாகாது.)

பாடசாலை பாட நேரங்களும் 45 mins. இதில் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு மாறுவதட்கே 10mins சென்றுவிடும். புதிய கல்வி திட்டத்தின் படி O/L வரை யாரையும் Fail பண்ண முடியாது. எனவே பாரிய ஏற்ற தாழ்வுடைய புரிதலுடன் கூடிய (Learning ability) மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கற்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் பணம் சம்பாதிக்கவே தனியார் வகுப்புகள்.

என்று வாதிட்டால் பாடசாலையில் என்ன இலவசமாகவா கற்பிக்கிறார்கள்.
நாம் இலவச கல்வி என்று சொன்னாலும் மறைமுகமாக Tax என்ற அடிப்படையில் நாமே பாடசாலைக்கு கட்டணம் செலுத்துகிறோம்.
தனியார் வகுப்பு கட்டணம் என்பது நேரடியாக மூக்கைத் தொடுவது போன்றது பாடசாலை என்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது. இரண்டுக்கும் நாம்தான் கட்டணம் செலுத்துகிறோம்.

ஒரு பட்டதாரியாக இருந்தும் மிகக் குறைந்த சம்பளம் பெறுவது ஆசிரியர்களே. எனவே அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மேலதிகமாக மாணவர்கள் பயன்படும் விதத்தில் செலவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது.


தனியார் வகுப்புகள் தான் தீர்வு என்றால் பாடசாலைகளை மூடி விடலாமே என்ற ஒரு வாதம்.

தனியார் வகுப்புகள் வெறும் கல்வியை மட்டுமே புகட்டுகின்றன. ஆனால் பாடசாலைகள் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம், விளையாட்டு ஆளுமை விருத்தி போன்ற வாழ்க்கைக்கு அவசியமான அனைத்தையும் வழங்குகின்றன. தனியார் வகுப்புகள் ஒரு சில கடினமான பாடங்களுக்கு மட்டுமே. பாடசாலை எல்லா பாடங்களையும் கற்றுத்தரும்.


இலங்கை கல்வி அமைப்பை பொறுத்தவரை தனியார் வகுப்புக்கு செல்லாத உயர்தர மாணவர்கள் இல்லை எனலாம். (Design அப்படி). கொழும்பிலே சில பிரபலமான தனியார் அல்லது Semi Government பாடசாலைகளில் மாணவர்கள் Tuition க்கு செல்லாமல் கற்கிறார்கள் என்று ஒரு வாதம் முன் வைக்கலாம். அங்கு IPL லுக்கு Players எடுப்பதுபோல் புரிய வைக்கும் கலையில் சிறந்த ஆசிரியர்களை தெரிவு செய்கிறார்கள். எனவே தனியார் வகுப்புகளுக்கு செல்லும் அவசியம் இல்லாமல் போகிறது. இருந்தபோதும் அங்கும் மேலதிக வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

உயர்தரத்தை பொறுத்தவரை பாடசாலை ஆசிரியர்களுக்கு வரும் மிகப்பெரிய சங்கடம் ஏற்கனவே பாடங்களை மாணவர்கள் தனியார் வகுப்புக்கு சென்று கற்று விடுவதால் எதனை கற்றுக்கொடுப்பது எப்படி கற்றுக் கொடுப்பது என்ற ஒரு தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது.

அதற்குரிய ஒரு தீர்வாக தான் சம்மாந்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் TILS கற்பித்தல் முறை. (இதை பற்றி அறிய:- http://www.swdc.lk/…/proposal-for-establishing-a-total-int…/ )இது ஏற்கனவே அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் பரீட்சர்த்த முறையில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

http://www.swdc.lk/blog/2018/07/21/அல்-மர்ஜான்-மகளிர்-வித்த/ )இதை எந்த அளவு மாணவர்களும் , பெற்றோரும், ஆசிரியர்களும் செயட்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இதன் வெற்றி தங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தனியார் வகுப்புகளையும் பாடசாலை பாடநேரங்களையும் பிரயோசனமாக பயன்படுத்தும் வழிகள் ஏற்படுகிறது. கொழும்பிலே பல பாடசாலைகள் இதனை ஒத்த வழி முறையை கையாளுகின்றனர்.


பெற்றோர்கள், மாணவர்கள் செய்யும் தவறு?

போட்டி உலகம் அடுத்தவனை போல் என் பிள்ளையும் வர வேண்டும் என்பதற்காக இரண்டு வயதில் இருந்தே தனியார் கல்வி. கடினமான பாடங்களுக்கு தனியார் வகுப்பு போவது நியாயம்தான் ஆனால் இப்போது எல்லா பாடங்களுக்கும் எல்லா ஆண்டுகளுக்கும் தனியார் வகுப்புக்களை நாடும் கலாச்சாரமே மேலோங்கி நிற்கிறது.

ஏற்கனவே மாணவர்கள் பாடங்களை தனியார் வகுப்பில் கற்றுவிடுவதால் பாடசாலை ஆசிரியர்களை அலட்சியம் செய்யும் மனநிலை ஏற்படுகிறது.


எடுத்ததுக்கெல்லாம் தனியார் வகுப்பு, தன் பிள்ளை படிக்கிறான் வகுப்புக்கு செல்கிறான் என்ற ஒரு பெருமை அடிப்பதற்கு பெற்றோரின் மனநிலை மாறிவிட்டது. இன்று உடற்பயிற்சி, விளையாட்டு எல்லாம் வெறும் Mobile Games ஆகவே உள்ளது. ஓய்வில்லாமல் வகுப்புகள் என்று ஓடுவதால் உடல், உள நிலையில் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

(இதில் சில ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி தனியார் வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று நிர்பந்திப்பதும், வராதவர்களை ஒரவஞ்சனையோடு கையாள்வதும் நடக்காமல் இல்லை. அவர்கள் இறைவனின் தீர்ப்பு என்ற ஒன்றை மறக்க வேண்டாம்.)


இரவு நேர வகுப்புகளுக்கு மாணவர்களையும் பெற்றோரையும் சாடுவது நியாயமா?

பல சமூக சீரழிவுகளுக்கு காரணமான இரவு நேர வகுப்புகளுக்கு மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மாணவர்களும் பெற்றோர்களும் இரவு நேர வகுப்பை பொதுவாக விரும்புவதில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஆசிரியரிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் அவரால் நிர்ணயிக்கப்படும் நேரத்துக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

ஆக இரவு நேர வகுப்புகளை நிறுத்துவது ஆசிரியர்களினதும், வகுப்புகளை நடத்தும் நிறுவனங்களினதும் பொறுப்பு. அதனை ஊரில் உள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்நின்று செயற்படுத்த வேண்டும்.


எனவே போட்டி நிறைந்த உலகில் தனியார் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. இதுவே யதார்த்தம். அதை குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக்கொள்வது ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும், பெற்றோர்களினதும் பொறுப்பு.

எங்கு கற்பித்தாலும் ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
"ஒருவன் தன்னை விட உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என முழுமனதோடு நினைத்து பாடுபடுபவர்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே."


இவ்வண்ணம்,

இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog