Breaking

Monday

சம்மாந்துறை மலையடிக்கிராமம் அஸ்-சபாப் விளையாட்டு கழக மென்பந்து கிரிகெட் போட்டி.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை மலையடிக்கிராமம் அஸ்-சபாப் விளையாட்டு கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை  வின் ஸ்டார் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இச் சுற்றுப் போட்டி 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 7பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு  சம்மாந்துறை வின் ஸ்டார் விளையாட்டுக் கழகமும்,  சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ் இலவன்; விளையாட்டுக் கழகமும்  தெரிவானது.

நாணையச் சூழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை வின் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 5ஓவர் நிறைவில் ஒரு விக்கட்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ் இலவன்;  விளையாட்டுக் கழகம் 5 ஓவர் நிறைவில் 2விக்கட்டை இழந்து 28 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இந்நிகழ்வு அஸ்-சபாப் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஜீ.எம்.ஜௌபர் தலைமையில் அல்-அர்சத் மகா வித்தியாலய மைதானத்தில் இ;ன்று நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச உறுப்பினருமான ஐ.எல்.மாஹிர் கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம், சிறப்பு அதிதியாக சம்மாந்துறை சிப்ஹா சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.நஸார், உள்ளிட்ட ஜபல் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் எம்.றகீம், விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின்  சிறந்த தொடர் ஆட்டநாயகன் விருதை  கல்லரிச்சல் கிங்ஸ் இலவன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் எம்.எல்.பௌமீர், இறுதி சுற்றுபோட்டியின் ஆட்டநாயகன் விருதை  வின் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் எப்.எம்.ஸாதீக் ஆகியோர்கள் பெற்றுக்கொண்டர்.











செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog