Breaking

Wednesday

சம்மாந்துறை இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தினால் மக்கள் அசௌகரியம்.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை இலங்கை வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ஏ.ரீ.எம்) அடிக்கடி செயலிழப்பதாக வடிக்கையாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக் காட்டுகின்றனர்.

சம்மாந்துறை பிரதேசமானது 136 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும், 51 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவையும் கொண்டதாகவும், சுமார் 72 ஆயிரத்திற்கு மேற்பட்ட சனத்தொகையை கொண்டதாகவும் காணப்படும் இவ் பிரதேசத்தில் இலங்கை வங்கியின் ஒரேயொரு தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ஏ.ரீ.எம்) மாத்திமே காணப்படுகின்றது.

அரசாங்க வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் (ஏ.ரீ.எம்) அடிக்கடி செயழப்பதனால் காரைதீவு, நிந்தவூர், கல்முனை, அம்பாரை போன்ற தூர பிரதேசங்களுக்கு இப்பிரதேச மக்கள் பணத்தை பெறுவதற்கு செல்ல வேண்டியுள்ளதால் வாடிக்கையாளர்களும், அரசாங்க உத்தியோகத்தர்களும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் பணம் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் வங்கி நிர்வாகத்திடம் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரைக்கு எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகமான மக்கள் சனத்தொகையை கொண்ட பிரதேசத்திலுள்ள வங்கி கிளையின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் நவீன மயப்படுத்தாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதுவிடயத்தில் துரித கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog