Breaking

Saturday

ஆப்தீனின் ஆழமான ஆளுமைக்கு ஆங்கிலமே ஆதாரம்!


(காரைதீவு  நிருபர் சகா)

ஆப்தீனின் ஆழமான ஆளுமைக்கு  ஆங்கிலமொழியேஆதாரமாகும் அவரது பிரிவு எமது வலயத்தைப்பொறுத்தவரை பேரிழப்பாகும்.
இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் புகழாரம் சூட்டினார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் 20வருடகாலம் ஆங்கிலமொழிச்சேவையாற்றிய ஆங்கிலபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆதம்பாவா ஆப்தீன் நேற்றுமுன்தினம்  தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.
அதனையொட்டிய பிரிவுபசார நிகழ்வு வலயக்கல்விப்பணிமனையில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட்கியாஸ் தலைமையில் நேற்று(29) நடைபெற்றது.

மேலும் ஆப்தீனின் அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் நஜீம் பொன்னாடை போர்த்திப்பாராட்டிக்கௌரவித்துப்  பேசுகையில்:

ஆப்தீன் ஆங்கிலமொழி வளர்ச்சியில் மட்டுமல்லாது வலயத்தின் பொதுவான கல்விவளர்ச்சியிலும் முக்கிய பங்கெடுத்துக்கொண்டார்.

யாரையும் நோகடிக்காமல் எந்தநேரமும் புன்னகையுடன் விசுவாசமான அர்ப்பணிப்பான சேவையைச்செய்த ஆப்தீன் பொதுவாழ்வில் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுகாட்டியிருந்தார். பொறுமைசகிப்புத்தன்மைக்கு உதாரணபுருசராகத் திகழ்ந்தவர்.

அவரது மொழிப்புலமை எமது பணிமனைக்கு 24மணிநேரமும் தேவைப்பட்டது.  இன்று அவர் பிரிகிறார். அவரது இடத்தை நிரப்புவதென்பது கஸ்ட்டமானதாகும். அவர் ஓய்வுபெற்றாலும் எமது சேவைக்கு அழைக்கப்படுவார். வளவாளராக கலந்துகொள்வதோடு வலயக்கல்வி வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றவேண்டும். பின்னிட்ட காலத்தில் அவர் சீரும்சிறப்புடன் ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். என்றார்.

மேலும் கல்விசார் உத்தியோகத்தர்கள் சார்பில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சேவைக்கால ஆசிரியஆலோசகர் எம்.எஸ்.எம்.சிறாஜூதீன் ஆகியோர் நினைவுரையாற்றினர்.



நன்றியுரையை அவைச்செயலாளரும் ஆசிரியஆலோசகருமான  கே.ரத்னேஸ்வரன் நிகழ்த்தினார்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog