Breaking

Sunday

மஜீட்புர வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்துக்குற்பட்ட 36 பாடசாலைகளின் அதிபர்களினால் 2018-03-29 ம் திகதி சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ A.M.M.நௌசாட் அவர்களிடம் கோரப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரனங்கள் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக Rishad Bathiudeen Education & Welfare Foundation நிறுவனத்தினால் 31-8-2018 ம் திகதி மாலை 04.30 மணிக்கு மல்வத்தை கமு/சது/மஜீத்புர வித்தியாலயம் வளாகத்தில் அதிபர் M.M.முசம்மில் தலைமையில் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை பிரதே சபையின் உறுப்பினர் கௌரவ ஏ.எம்.றியாஸ்,Rishad Bathiudeen Education & Welfare Foundation Sammanthurai electorate இணைப்பாளர் M.S.யாஸ்தீன் JP மற்றும் மறுமலர்ச்சி சமுக சேவை அமைப்பின் தலைவர் ஆசிரியர் M.M.தௌபீக்,கமு/சது/ விபுலானந்தா மகா வித்தியாலயம் அதிபர் திரு கே. ராமேஸ்வரம், கமு/சது/ மல்லிகைத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.கனகம்மா, கமு/சது/ புதுநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு ஐ.சந்திரகுமார். கமு/சது/ விக்னேஸ்வரா வித்தியாலயம் அதிபர் திரு வி.ராமச்சந்திரன், கமு/சது/ வளத்தாப்பிட்டி தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு பீ.சிறீதரன், கமு/சது/ தாஹிரா வித்தியாலயம் அதிபர் திரு ஏ.எம்.எம்.சாஹில், கமு/சது/ ஸ்ரீ நாவலர் வித்தியாலயம் அதிபர் திருமதி எஸ் சிவனேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பாதுகாவலர்கள் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் நிருவாகிகள்,மற்றும் ACMC கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.















செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog