Breaking

Tuesday

சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ் போராளிகளின் சோர்வு நிலை.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது 

முஸ்லிம் காங்கிரசின் 28 வது பேராளர் மாநாட்டில் செயலாளர் நிஸாம் காரியப்பர் அவர்கள் கட்சியின் வருடாந்த உரையினை நிகழ்த்தியிருந்தார். அதில் கட்சியின் அபிவிருத்தி பற்றிய  விபரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற ஏதோ ஒரு புத்தகம் பற்றியும், கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற வீர மறவர்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாக குறிப்பிட்டு வாய்நிறய புகழ்ந்துரைத்தார்.  

அது அவரது முட்டாள்த்தனத்தை காட்டுகின்றதென்று கட்சி போராளிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டதனை மண்டபத்தில் காணக்கூடியதாக இருந்தது. 

இந்த புத்தகம் எத்தனை பேர்களின் கைகளுக்கு சென்றடைகின்றது ? கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று நாளாந்தம் விமர்சிக்கின்றவர்களின் கைகளுக்கு கிடைக்கின்றதா ? இதனை வாசித்து அறிந்தவர்கள் எத்தனை பேர் ? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடமுடியாது.

நாடு தழுவியரீதியில் பல போராளிகள் கட்சியின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும், கட்சிக்கும், தலைவருக்கும் எதிராக வருகின்ற விமர்சனங்களை எதிர்கொண்டு சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றார்கள்.

எந்தவித எதிர்பார்ப்புமில்லாத இவ்வாறான போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் விலைமதிக்க முடியாதவைகளாகும். 

அத்தோடு "SLMC போராளிகள் குழும" உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் கட்சி நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக முன்னெடுப்பதுடன், கட்சியின் நாளாந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு செல்கின்றார்கள். 

இதனால் முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் நிலைகுலைவதுடன், மாற்று கட்சி காரர்களாலும், போலி முகநூல் மூலமாகவும் இவர்கள் எதிர்கொள்ளும் வசைபாடல்களுக்கு குறைவே இல்லை. 

இவ்வாறானவர்களுக்கு பொதுப்படையாக நன்றி கூறியிருந்தால்  மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். உட்சாகமும் ஏற்பட்டிருக்கும். ஹஸனலி சேர் அவர்கள் செயலாளராக இருந்தபோது கட்சி போராளிகளுடன் ஏற்படுத்தியிருந்த தொடர்புகளில் கால் பங்குகூட இன்றய செயலாளரிடம் இல்லை.

தங்களது சொந்த பணத்தினை செலவழித்து கட்சிக்காக நாளாந்தம் உழைக்கினறவர்களை புறந்தள்ளிவிட்டு, உத்தியோகத்தர்களாக கடமையின் நிமித்தம் கடமை புரிகின்றவர்களை மட்டும் பெயர் குறிப்பிட்டு புகழ்ந்ததானது எந்தவிதத்தில் நியாயமாகும் ? 

செயலாளர் நிஸாம் காரியப்பரின் இந்த உரையானது நாளாந்தம் சமூகவலைத் தளங்களில் எழுதுகின்ற போராளிகளுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தியுள்ளது. 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog