Breaking

Tuesday

நிந்தவூர் தூய நகருக்கான சம்மேளனத்தின் பொதுச்சபைகக் கூட்டம்.

தூய நகருக்கான சம்மேளனம் நிந்தவூர் அமைப்பின் பொதுச்சபைக் கூட்டமானது 06-08-2018. இன்று நிந்தவூர் பெரிய பள்ளிவாசலில் 8:30 மணியளவில் நடைபெற்றது.
இவ்வமைப்பின் நோக்கமானது ஊரில் நடைபெறும் பாவங்கள், அநியாயங்கள், சமூக விரோதச் செயல்கள் என்பனவறை தடுக்கவும் தீமைகள் ஊருக்குள் நுழையாமல் காக்கவும் நிந்தவூரை தூய நகராக்கவும் நிந்தவூர் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இச்சம்மேளனத்தில் ஊரில் உள்ள எல்லா அமைப்புக்களையும் முடிந்தவரை உள்வாங்கி ஊரின் பொது நலன்களுக்காக ஒற்றுமையாக செயற்படுவதற்கான விரிந்த வீரியமிக்க ஒரு சிறந்த கட்டமைப்பை கொண்ட ஒரு சபையை உருவாக்கும் நோக்கிலேயே இப்பொதுச் சபைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.
மேலும் இன்று இடபெற்ற இக்கூட்டத்தில் புதிய நிர்வாக குழுவினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு ஊரின் நலன்கருதி பல விடையங்களும் பேசப்பட்டு சபையில் தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு நல்லதே நடக்கவேண்டுமென உருவாக்கப்பட்ட இத்தூய்மையான அமைப்புக்கு ஊர்மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கி நமதூரை தூய நகராக ஆக்கிட வழிவகுப்போம்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog