Breaking

Sunday

'89 Born அமைப்பின் ஒன்றுகூடலும் T-Shirt வெளியீடும்.


சம்மாந்துறையைச் சேர்ந்த  1989ம் ஆண்டு பிறந்த நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் 250க்கும் அதிகமான அங்கத்தவர்களை உள்ளடக்கி '89 Born எனும் பெயரிலான அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக இயங்கிக்கிக்கொண்டிருக்கின்றது. 

இவ்வமைப்பின் ஒன்றுகூடலும் T-Shirt வெளியீடும் எனும் தலைப்பிலான நிகழ்வொன்று கடந்த 2018.08.25ம் திகதி சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் Dr.என்.எம். ஹாலிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டில் உள்ள 45 அங்கத்தவர்கள் நேரடியாகவும் மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அங்கத்தவர்கள் facebook நேரலை ஊடாகவும் இந்நிகழ்வில் பங்குபெற்றினார்கள்.

இந்நிகழ்வில் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள்  தொடர்பாக தலைவரினால் தெளிவு படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செயலாளர் ஆ. இர்ஷாத் அவர்களினால் அமைப்பின் யாப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் அனைவருக்குமான  T-Shirt உம் வெளியிட்டு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

1 comment:

  1. சம்மாந்துறையில் வெறுமனே 89 ல் பிறந்தவர்கள் என்றும் வெறுமனே ஒரு ரீ-சேர்ட் வெளியீடு என்று விழாக்கோலம் காணும் இளைஞர்கள் ............நாங்கள் 89 ல் பிறந்தவர்கள் சம்மாந்துறை இளைஞர்களுக்கு முன்மாதிரியானவர்கள் அதனால் எங்களது ரீ சேர்ட்டுக்களில் "சீ -தனம் வாங்காத 89" என்ற வாக்கியத்தைப் போட்டிருந்தால் இவர்களை முழு கிழக்கிலங்கையும் பாராட்டியிருக்கும் அது மட்டுமல்ல இவர்களது பெற்றோர்களை முழு சமுதாயமே பாராட்டியிருக்கும். இப்பவும் ஒன்றும் குறையவில்லை இன்னும் ஒரு ஒன்று கூடலை எதிர்பார்க்கின்றோம்.

    இப்படிக்கு
    92 ல் பெண் பிள்ளைகளை பெற்றுவிட்டு சீ -தனம் கொடுக்க முடியாமல் சிக்கித்தவிக்கும் தாய்மார்கள் சங்கம்
    சம்மாந்துறைப்பெரும் பாகம்

    ReplyDelete

LightBlog