Breaking

Sunday

மாகாண சபைத் தேர்தல் சர்ச்சை.

எஸ்.றிபான்
மாகாண சபைத் தேர்தல் பற்­றிய பேச்­சுக்கள் இலங்கை அர­சியல் வட்­டா­ரங்­களில் அதிகம் பேசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. கிழக்கு, வட­மத்தி மற்றும் சப்­ர­க­முவ மாகாண சபைகள் கலைக்­கப்­பட்டு ஒரு வரு­டத்தைக் கடந்­துள்ள போதிலும் தேர்­தலை நடத்­தாது பிற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் நிலையே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வதில் பயந்த நிலையில் உள்­ள­மையே மாகாண சபைத் தேர்­தலை பிற்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­ப­தற்கு பிர­தான கார­ண­மாகும். இதே­வேளை, மாகாண சபைத் தேர்­தலை எந்த முறை­மையில் நடத்­து­வது என்­பது குறித்­தான வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. தேர்­தலை பழைய விகி­தா­சா­ரப்­படி நடத்த வேண்­டு­மென்று சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. புதிய முறைப்­ப­டியே மாகாண சபைத் தேர்­தலை நடத்­த­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார். பெருந் தேசி­ய­வாதக் கட்­சிகள் புதிய கலப்பு முறையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று விரும்­பு­கின்­றன. இதனால், மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்­தான சர்ச்­சைகள் தீவி­ர­ம­டைந்து கொண்­டி­ருக்­கின்­றன.
மாகாண சபைத் தேர்தல் முறை
கடந்த காலங்­களில் மாகாண சபைத் தேர்தல் முதல் அனைத்து தேர்­தல்­களும் விகி­தா­சார முறைப் படியே நடை­பெற்­றுள்­ளன. இத்­தேர்தல் முறையை மாற்­றி­ய­மைத்து விகி­தா­சார வாரியும், தொகுதி வாரியும் கலந்த கலப்பு முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் சட்­ட­மூ­லத்தைக் கொண்டு வந்­துள்­ளது. இதன்­படி உள்­ளூ­ராட்சி சபை­களின் தேர்தல் நடை­பெற்­றது. இத்­தேர்தல் முடி­வுகள் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு மட்­டு­மன்றி பெருந் தேசி­ய­வாதக் கட்­சி­க­ளுக்கும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்குப் புதிய தேர்தல் முறைதான் கார­ண­மென்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. அதே வேளை, பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் வாழும் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தின் எண்­ணிக்­கையை இத்­தேர்தல் முறை குறைத்­துள்­ளது. இதனால், மாகாண சபைத் தேர்­தலும் புதிய முறைப்­படி நடக்­கு­மாயின் தமிழ், முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­விடும். ஆதலால், மாகாண சபைத் தேர்­தலை தனியே பழைய மாதிரி விகி­தா­சார முறைப்­படி நடத்த வேண்­டு­மென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­களை முன் வைத்­துள்­ளன. புதிய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு வகுக்­கப்­பட்­டுள்ள தொகுதி எல்­லைகள் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கக் கூடிய வகையில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும். சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­காத வகையில் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட வேண்­டு­மென்று சிறு­பான்மைக் கட்­சிகள் கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.  கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் மாகாண சபைத் தேர்­தல்­முறை பற்­றிய விவாதம் நடை­பெற்­ற­போது அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பாடு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டன.
மாகாண சபைத் தேர்தல் 50இற்கு 50 என்ற அடிப்­ப­டையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி  நடத்­து­வ­தற்கு முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் தங்­களின் ஆத­ரவை ஏற்­க­னவே அளித்­தி­ருந்­தன. ஆயினும், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கிடைக்­கப்­பெற்­றுள்ள நேரடி அனு­ப­வத்தின் பின்னர் சிறு­பான்மைக் கட்­சிகள் பழைய முறைப்­ப­டியே தேர்­தலை நடத்த வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றன.
புதிய முறைக்கு எதிர்ப்பு
மாகாண சபைத் தேர்­தலை புதிய முறைப்­படி நடத்தக் கூடாது. அது முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைத்து விடு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் கேட்­டுள்­ள­மையை அமைச்சர் பைஸர் முஸ்­தபா கடு­மை­யாக சாடி­யுள்ளார்.
புதிய முறைப்­படி தேர்­தலை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வை­ய­ளித்­த­வர்கள் எல்லை நிர்­ணய விட­யங்­களை காரணம் காட்டி தேர்தல் முறை­மையை எதிர்ப்­பது வேடிக்­கை­யாக உள்­ள­தென்று அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார். புதிய முறை முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தா­தென்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
அமைச்சர் பைஸர் முஸ்­தபா அர­சாங்­கத்தின் அமைச்சர் என்ற அடிப்­ப­டையில் தமது கருத்­துக்­களை முன்வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றாரே அல்­லாமல் ஒரு முஸ்லிம் பிர­தி­நிதி என்ற அடிப்­ப­டையில் தமது கருத்தை முன்­வைக்­க­வில்லை. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலின் போதும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்­பேற்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டது. 70இற்கு 30 என்­றி­ருந்த கலப்பு முறையை, 60இற்கு 40ஆக மாற்­றி­னார்கள்.
சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­படக் கூடா­தென்­ப­தற்­கா­கவே இந்த மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம் என்று அர­சாங்­கமும், முஸ்லிம் கட்­சி­களும் தெரி­வித்துக் கொண்­டன. ஆனால், தேர்தல் முடி­வுகள் தலை கீழா­கவே இருந்­தன. இத­னால்தான் முஸ்லிம் கட்­சி­களும், தமிழ்க் கட்­சி­களும் மாகாண சபைத் தேர்­தலை பழைய முறைப்­படி நடத்த வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.
தாம் ஆத­ரவு அளித்­த­வொரு சட்­ட­மூலம் எதிர்த் தாக்­கத்தை தமது சமூ­கத்­திற்கு ஏற்­ப­டுத்­தும்­போது அதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மென்று முஸ்லிம் கட்­சிகள் கேட்டுக் கொண்­டி­ருப்­ப­தனை ஒரு நய­வஞ்­சக நட­வ­டிக்­கை­யா­கவோ, வேடிக்­கை­யான ஒரு செயற்­பா­டா­கவோ கருத முடி­யாது.
18வது திருத்தச் சட்ட மூலத்தை மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ அர­சாங்கம் கொண்­டு­வந்த போது அமைச்சர் பைஸர் முஸ்­தபா உட்­பட எல்லா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளித்­தார்கள். பின்னர் இன்­றைய அர­சாங்கம் 18வது திருத்­தத்தை சட்­டத்­தினை வலு­வற்­ற­தாக்­கு­வ­தற்கு 19வது திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டுவந்­த­போது அமைச்சர் பைஸர் முஸ்­தபா உட்­பட எல்லா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அத­ரவு வழங்­கி­னார்கள். 18இற்கு கை உயர்த்தி விட்டோம் என்­ப­தற்­காக 19இற்கு ஆத­ரவு வழங்க முடி­யா­தென்று சொல்ல முடி­யாது.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சா­ங­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­படும் எல்லா சட்­ட­மூ­லங்­களை ஆத­ரிப்­ப­துதான் வழக்­க­மாகும். இதற்கு ரவூப் ஹக்கீம், றிசாட் பதி­யு­தீனும் விதி­வி­லக்­கல்ல. இதில் நான் சுத்தம் என்ற எந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் நெஞ்சை நிமிர்த்த முடி­யாது.
ஆதலால், மாகாண சபைத் தேர்­தலை புதிய முறைப்­ப­டியே நடத்­துவோம் என்று அடம்­பி­டித்துக் கொள்­வது சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களில் இன்­றைய அர­சாங்கம் அக்­கறை கொள்­ள­வில்லை என்று தெரி­கின்­றது.
சிறு­பான்­மை­யி­னரின் பலத்த ஆத­ர­வுடன் இன்­றைய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டாலும் பேரி­ன­வாத கோரப்­பற்கள் வழக்­கம்போல் சிறு­பான்­மை­யி­னரை காயப்­ப­டுத்திக் கொண்டே இருக்­கின்­றன.
சிறு­பான்மைக் கட்­சிகள் தங்­களின் குறை­களை எடுத்துக் கூறலாம். ஆயினும் தேர்தல் புதிய முறைப்­ப­டியே நடை­பெ­று­மென்று அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்­துள்­ளமை ஜன­நா­யத்­திற்கு மாற்­ற­மா­கவே இருக்­கின்­றது. புதிய முறைப்­படி மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு வகுக்­கப்­பட்­டுள்ள தொகுதி எல்­லைகள் சிறு­பான்­மை­யி­னரின் குறிப்­பாக முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்கச் செய்யும் வகையில் அமைத்­து­விட்டு தேர்­தலை நடத்­து­வது முஸ்­லிம்­களின்  மீது திணிக்­கப்­பட்­டுள்ள அடாத்­தான நட­வ­டிக்­கை­யாகும். சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநி­யாயம் செயவ்­தற்­கா­கவே கொண்­டு­வந்­துள்ள தோதல் முறையை வைத்துக் கொண்டு ஜன­நா­யகம் பேச முடி­யாது.
தேர்­தலை பிற்­ப­டுத்த முடி­யாது
இதே­வேளை, அர­சாங்கம் புதிய முறைப்­ப­டியே தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருப்­பது தமது அர­சியல் பல­வீ­னத்தை மறைப்­ப­தற்­கா­க­வே­யாகும். மாகாண சபைத் தேர்­தலை உட­ன­டி­யாக எந்த முறையின் அடிப்­ப­டையில் நடத்­தி­னாலும் அது அர­சாங்கத் தரப்­பி­னரின் செல்­வாக்­கி­லுள்ள வீழ்ச்­சியை இன்­னு­மொரு தடவை காட்­டு­வ­தா­கவே அமைந்­து­விடும். ஆதலால், மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்னர் தமக்­கான செல்­வாக்கை அதி­க­ரிக்கச் செய்ய வேண்­டிய கட்­டா­யத்தில் அர­சாங்­கத்­தி­லுள்ள இரண்டு பிர­தான கட்­சி­களும் உள்­ளன.
இத­னால்தான், புதிய முறைப்­படி தேர்­தலை நடத்த வேண்டும். அதில் மாற்றம் செய்ய முடி­யாது. மாற்­றங்­களை கோருவோர் தங்­களின் முறைப்­பாட்டைச் செய்­ய­லா­மென்று அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.
மேலும், கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்தி, கிழக்கு மாகாண சபை­களின் தேர்­தலை இனியும் பிற்­போடக் கூடாது.
இம்­மா­கா­ணங்கள் ஆளு­நர்­களின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன. கலப்பு தேர்தல் முறை­மையின் கீழ் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பில்­லாத வகையில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டதன் பின்­னர்தான் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வது என்றால் கால­தா­ம­தங்கள் ஏற்­படும். ஆதலால், பழைய முறைப்­படி தேர்­தலை நடத்­து­வதே சிறந்­த­தென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசாட் பதி­யுதீன் ஆகி­யோர்கள் கேட்டுக் கொள்­வதில் உள்ள நியா­யத்­தையும் அர­சாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்­றைய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட போது சிறு­பான்­மை­யினர் தங்­களின் துன்­பங்கள் எல்லாம் பனிபோல் மறைந்து போய்­வி­டு­மென்று வைத்துக் கொண்ட நம்­பிக்­கையில் மண்ணைப் போடும் நட­வ­டிக்­கை­க­ளையே அர­சாங்கம் செய்து கொண்­டி­ருக்­கின்­றது. இன்­றைய அர­சாங்­கத்­தினால் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்­க­ளா­வார்கள். இதற்கு முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் துணை­யாகச் செயற்­பட்டுக் கொண்­டார்கள். அவர்கள் அர­சாங்­கத்தை திருப்­திப்­ப­டுத்த வேண்­டு­மென்று நினைத்­தார்­களே அன்றி, முஸ்லிம் சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்த வேண்­டு­மென்று எண்­ண­வில்லை. இத­னால்தான் முஸ்­லிம்கள் இன்று அவ­லங்­களை அனு­பவித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
அதற்­காக முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபைத் தேர்தல் விட­யத்தில் பேசு­வ­தனை குறை­காண முடி­யாது. அதனை தவறு என்று சொல்­லு­வது முஸ்லிம் சமூ­கத்தை இன்னும் சீர­ழிப்­ப­தற்கு துணைபோகும் ஒன்­றாகும். பேரி­ன­வா­தி­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்கும் முயற்­சி­யாகும்.
ஆதலால், மாகாண சபைத் தேர்­தலை பழைய முறைப்­படி நடத்த வேண்டும். புதிய முறைப்­படி நடத்த வேண்­டு­மாயின் எந்த இனமும் பாதிக்­காத வகையில் எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட வேண்டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். முஸ்லிம் கட்­சிகள் அரசாங்கத்தின் பங்காளிகள் என்று வெறுமனமே இருக்காமல் சமூகத்தை பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒற்றுமை வேண்டும்
இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகள் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும் அதனை ஒற்றுமையுடன் பேச வேண்டும். மேலும், கலப்பு தேர்தல் முறைக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எல்லைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்ததன் பின்னர்தான் அம்முறையில் தேர்தலை நடத்தலாமென்ற தங்களின் நியாயத்தையும் ஒற்றுமையுடன் சொல்ல வேண்டும். சிறுபான்மைக் கட்சிகள் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும், சிறுகட்சிகளின் ஒத்துழைப்பையும் இதற்கு பெற்றுக் கொள்ள வேண்டும். ஜே.வி.பி. புதிய முறைப்படியே தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டுள்ளது. ஆதலால், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகளும், சிறு கட்சிகளும் ஒற்றுமைப்படுதல் வேண்டும். அரசாங்கம் தமது பலவீனத்தை மறைப்பதற்காக தேர்தலை பிற்போடுவதனை தவிர்த்து முதலில் பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கு முன் வருதல் வேண்டும்.

நன்றி - விடிவெள்ளி
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog