Breaking

Saturday

யுத்தத்தில் வடக்கு வென்றதா தெற்கு வென்றதா? என்பதல்ல பிரச்சினை!


யுத்தத்தில்     வடக்கு வென்றதா தெற்கு வென்றதா? என்பதல்ல பிரச்சினை. எத்தனை
மனங்களை வென்றுள்ளார்கள் என்பதே பிரச்சினை.இவ்வாறு  நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர்
இஸதீன்லத்தீப் தெரிவித்தார்.

ஆணைக்குழுவும் அகம் நிறுவனமும் இணைந்து கல்முனை இ.ம.ஆ.கல்முனைப்பணிமனையில் நேற்று சமுகநல்லிணக்கம் தொடர்பான கூட்டமொன்றை நடாத்தினர்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

யுத்தத்தில் உறவுகளை இழந்தோர் நினைவேந்தல்களை நடாத்துவதென்பது அவர்களது அடிப்படை உரிமையாகும். அதில்
பிரச்சினையில்லை.நாம்கூட இப்பிராந்தியத்தில் உறவுகளை இழந்தோருக்காக சமகநல்லிணக்க நினைவேந்தலை செய்யவேண்டும்.

நல்லிணக்கஅரசாங்கம் நல்லிணக்கத்தை முடியுமானவரை அமுல்படுத்திவருகின்றவேளை ஒரு பக்கம் எதிரான செயற்பாடுகளும் தொடரத்தான் செய்கின்றன. அதற்கு சில அரசியல்வாதிகளும் துணைபோகின்றனர்.கவலைக்குரியது.


காணாமல்போன உறவுகளையிட்டு சற்று சிந்தித்துப்பாருங்கள். அவர்களது குடும்பநிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை
பரிதாபகரமாகவுள்ளது. இதையிட்டு பலரும் கவனம்செலுத்தவேண்டும்.இன்று பலரும் சிவில் அரசியல் உரிமைகளைப்பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அவர்களது சமுக
பொருளாதார கலாசார உரிமைகளையிட்டு பெரிதாகப்பேசுவதில்லை.

இத்தகைய கூட்டங்களுக்கு கலாசர அலுவலர்கள் அழைக்கப்பட்டாலும் அவர்கள்வருவதில்லை. அரசஅதிபருடன் பேசவிருக்கின்றேன். சமயதலங்களுக்கு பொருட்கள் வழங்குவது மட்டும் அவர்களது
தொழிலல்ல. மாநாக இனங்கள் மத்தியில் புரிந்துணர்வை கலாசா ஒற்றுமையை ஏற்படுத்தவும் வேண்டும்.என்றார்.

தேசிய சகவாழ்வு மொழிஅமுலாக்கல் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.பிரதீஸ்கரன் பிரதான உரையாற்றினர்.கலந்துகொண்ட சிவில்சமுகப்பிரதிநிதிகள் சமாதான அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும்

கருத்துக்களை முன்வைத்தனர்.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog