Breaking

Sunday

சம்மாந்துறையில் சங்காபிசேகம்!


(காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற  சம்மாந்துறை கோரக்கர் பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிசேகம்   இன்று  22ஆம் திகதி  சனிக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

இன்று காலை 8.30மணியளவில் மஹாகும்பாபிசேக தின அஷ்டோத்திர சங்காபிசேகம்(108) நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சங்காபிசேக கிரியைகள் யாவும் பிரதமகுரு சிவஸ்ரீ கஜேந்திரன் குருக்கள் தலைமையில் நடைபெறும். 
சம்மாந்துறை தமிழ்க்குறிச்சியைச்சேர்ந்த கனடாவில் வாழும் திருவேலாயுதம்பிள்ளை சங்காபிசேக உபயகாரராக பங்கேற்கிறார்.

இதேவேளை கோரக்கோயில் அகோரமாரியம்மன் ஆலய வெளிவீதியுலா 25 ஆம் திகதியும் 27ஆம் திகதி தீமிதிப்பு சடங்கும் நடைபெறும் என ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் ம.பாலசுப்பிரமணியம்  தெரிவித்தார். 

எட்டாம்நாள் சடங்கு 04.07.2018இல் நடைபெற்று வருடாந்த தீமிதிப்பு சடங்கு நிறைவடையுமென தலைவர் பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog