Breaking

Wednesday

ஏறாவூரில் 28ஆம் திகதி அமைச்சா் சஜித் பிரேமதாச 2 கிராமங்கள் மக்களிடம் கையளிப்பாா்...!


(அஷ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசா  எதிா்வரும் 28.06.2018 காலை 09 மணிக்கு ஏறாவூர் நகரின் மீராக்கேணியில்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 86வது கிராமமான ”ஸம் ஸம் கிராமமும்” ,87வது கிராமம் ”ஸக்காத் கிராமங்களை மக்களிடம் கையளிப்பாா்.

அமைச்சரின் வீடமைப்பு திட்டமான” செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 2500 வீடமைப்பு கிராமங்கள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இக் கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  இவ் வைபவத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அமைச்சா் சஜித் பிரேமதாச மற்றும் அதிதிகள் இணைந்து  மக்களிடம் பகிா்ந்தளிக்கப்படும்.  

இவ் .இரண்டு கிராமங்களிலும் 43 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, அவா்களுக்கான வீட்டுரிமைப் பத்திரங்களும்  வழங்கி வைக்கப்படும். அத்துடன் அடிப்படை வசதிகளான குடிநீா்  மின்சார வசதிகள் , உள்ளக பாதைகள், அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன
அத்துடன்  செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ளவென மேலும் ஏறாவூர் நகரில் வாழும்  70 குடும்பங்களுக்கு 70 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடனும் ,” செந்துரு பியச ”எனும் வீடமைப்புத்  திட்டத்தின் கீழ் 50 இலட்சம் ரூபா வீட்டுக் கடன்களும் , அத்துடன் வறிய குடும்பங்களுக்கு வீட்டு உதவித்திட்டத்தின் கீழ் 170 குடும்பங்களுக்கு 85 இலட்சம் ரூபாவுக்கான வீட்டுக்கான காசோலைகளும்  அமைச்சாினால் வழங்கி வைக்கப்படும். 

நிர்மாணத்துறையில் ஏறாவூரில் நகரில் வாழும் இளைஞா் யுவதிகளை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு மேசன் தச்சுத் தொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டு நிர்மாணத்துறை அதிகார சபையினால் 25 இலட்சம் பெறுமதியான உபகரண பொதிகளும்  நிர்மாணப்பயிற்சி்ச் சான்றிதழ்களும்  வழங்கி வைக்கப்படுவதோடு வயது முதிா்ந்தவா்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடியும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்படும்.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்ல்ஹ் பிரதியமைச்சா்களான எஸ்.எஸ் அமீா் அலி ,அலி ஸாகீா் மொளலானா, மட்டக்களப்பு மாவட்ட ரீ.என்.ஏ பாராளுமன்ற உறுப்பிணா்கள் , கிழக்கு மாகாண ஆளுனா் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொள்வாா்கள். 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog