Breaking

Wednesday

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ராஜனின் கன்னிமக்கள்சேவை !


காரைதீவு நிருபர் சகா

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் தனது கன்னி மக்கள்சேவையாக கல்முனை 2ஆம் பிரிவின் நீண்டநாள் தேவையாகவிருந்துவந்த அழுக்கடைந்த ஒரு தாழ்நிலப்பிரதேசம் துப்பரவாக்கப்பட்டது.

இன்று (8) செவ்வாயக்கிழமை காலை இவ்வேலைத்திட்டம் கல்முனை மாநகரசபையின் கனரக வாகனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அங்கு மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனுடன் மாநகரசபை உறுப்பினர்களான ஹென்றிமகேந்திரன் வி.சிவலி;ங்கம் முன்னாள் மாநகரசபை எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் உள்ளிட்டோரும் சமுகமளித்திருந்தனர்.

ஊர்ப்பகுதிகளிலிருந்து நீரைக்கொண்டுவரும் நடராசா வாய்க்கால் இத்தாழ்நிலப்பிரதேசத்தில் வளர்ந்துள்ள ஒருவகை உதவாத சாப்பை புல்லினத்தால் தடைபட்டு தேங்கி தடைபட்டுநிற்கிறது.

இப்புல்லினத்திலிருந்து வரும் பஞ்சு வடிவிலான பூக்கள் அப்பகுதி மக்களுக்கு பலத்த அசௌகரியத்தைக்கொடுக்கிறது என்றும் ஒருவகை நோயை ஏற்படுத்திவருகின்றதெனவும் மக்கள் கூறுகின்றனர்.
மழைகாலத்தில் இப்பகுதிகளில் வாழமுடியாதவாறு பாம்பு போன்ற ஊர்வனவற்றின் தாக்கம் அதிகமாக காணப்படும். 
சூழ குடிமனைகளுள்ள இப்பிரதேசத்தில் இத்தாழ்நிலப்பிரதேசம் பாரிய ஆபத்தாக இருந்துவந்துள்ளது. 

இப்பிரதேசத்தை நிரப்பி வடிகானை கடலுக்குள் செலுத்தும் நோக்கில்  இன்று சுத்திகரிப்பு வேலைகள் இடம்பெற்றமையைக்காணக்கூடியதாயிருந்தது.





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog