Breaking

Sunday

குருநாகல் நகரில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம்.!


(அஷ்ரப் ஏ சமத்)

சீன  இலங்கை அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தும் பாரிய குருநாகல் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு  திட்டம்  கொழும்புக்கு வெளியே அடுத்த நகரமான குருநாகல் நகரில் வாழும் 43ஆயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனா்.

 அத்துடன் குருநாகலில் உள்ள வைத்தியசாலைகள், பல்கழைக்கழகம் மற்றும் அரச நிறுவனங்களது கழிவுநீர்களை  இத்திட்டத்தில் இணைப்பு வழங்கி சுத்திகரிப்பதனால் அப்பிரதேசத்தின் கழிவுநீர்கள் மலசல  நீா்களினால்  துா்நாற்றம் போன்ற பிரச்சினைகளை எதிா்நோக்கிய மக்களுக்கு  இவ் அபிவிருத்தித் திட்டத்தினால்  பாரியதொரு நன்மை கிட்டியுள்ளது.  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தாா்.


அமைச்சா் அவர்களின் தலைமையில்  மேற்படி திட்டம் சம்பந்தாக ஊடகவியலாளா் மாநாடும் திட்டங்களை பாா்வையிடும் நிகழ்வு நேற்று  (05) ந்திகதி குருநாகல் கழிவு நீா் செயற்திட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

இத் திட்டம் சம்பந்தமாக அமைச்சா்  ஊடகவியலாளா்களுக்கு  விளக்கமளிக்கையில் -
இத்திட்டம்  இலங்கையில் கொழும்பு நகருக்கு வெளியே ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது திட்டமாகும். 13,250 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை மக்களின் பாவனைக்கு வழங்கும் தறுவாயில் உள்ளது. அடுத்த மாதம் அளவில் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி தலைமையில் இத்  திட்டம் மககளிடம் கையளிக்கப்படும். 
இத்திட்டத்தின் மூலம் குருநாகல் நகரை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள நிலக்கீழ் நீர் சுத்தமடைவதுடன், கழிவு நீரினால் ஏனைய நீர் வளங்கள் பாதிப்படைவது முற்றாக தடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்காக சீன அரசாங்கம் 77.3 மில்லியம் அமேரிக்க டொலா், இலங்கை 3.200 மில்லியனையும் வழங்கியுள்ளது. இத் திட்டத்திற்காக மொத்தம் 13,250 மில்லியன் ருபா செலவிலானதொரு அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டதிற்கு நாம் 1 டொலா செலவழிக்கின்றோம் . ஆனால் 10 டொலா் அரசுக்கு வருமானமாக உள்ளது. 
இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலை  சுமாா் 4000 பேர் நாளாந்தம் பாவிக்கும் மலசல கூடங்கள் கழிவுநீா்கள்  இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பல்கழைக்ககழகங்கம், நகரத்தில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், அடுக்கு மாடி வீடுகள் அரச நிறுவனங்கள் கழிவு நீா் சுத்திகரிப்பில் இணைப்புக்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் கீழ் 6500 இணைப்புக்கள் வழங்கபபட  உள்ளன.   . சாதாரன ஒரு வீட்டுக்கு மலசல இணைப்புக்கு 225ருபாவே அறவிடப்படும்.   அத்துடன் இப்பிரதேசத்தின் குழாய் நீா் திட்டத்தின் கீழ் குருநாகரில் வாழும் 1 இலட்சத்து 50ஆயிரம் மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்கள் மற்றும் கழிவு நீா் அகற்றல் திட்டத்தில் நன்மையடைய உள்ளனர். இத்திட்டத்தினை சீன கம்பனியுடன்  கடந்த ஒரு வருடத்த்திற்குள் நீா்விநியோக வடிகாலமைப்புச் சபையினால் வெற்றிகரமாக முடிவுறப்பெற்றுள்ளன. 


இத்திட்டத்தினை இப் பிரதேச மக்களால் துா்நாற்றம் வீசும் என எதிா்த்த மக்கள் தற்பொழுது இத்திட்டத்தின் பிரயோசனங்களை கண்டு பெரிதும் வரவேற்றுள்ளன.  இத்திட்ட அலுவலகத்தின் அருகில் உள்ள வைத்தியசாலையின் மலசல குழியின் இருந்து இப்பிரதேசத்தில் துா்நாற்றம் வீசியது.  வைத்தியசாலையின்  மலசலகூட குழியின் நீா்கள் இத்திட்டத்தில் இணைத்தன் மூலம் இப் பிரதேசம் அழகாக உள்ளது. இதனால் நகரமும் அழகு படுத்தப்படுகின்றது. சூழல்ழும் பாதுகாக்கப்பட்டுள்ளது  துா்நாற்றம் அற்ற ஒர் அழகான சுத்தமான நகரமாக மாறிவருகின்றது. 
இதே போன்று ஜப்பான் அரசின் கடன் நிதியுடன்  கொரியா கம்பனியின்  நிர்மாணம் ஒபபந்தத்தில் கண்டியிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  மேலும் சனத்தொகை நெறிசலாக வாழும் நகரங்களான  காத்தான்குடி, மட்டக்களப்பு யாழ்ப்பாணம் , கல்முனை அநுராதபுரம், கதிா்காமம், வவுனியா யாயெல, போன்ற  நகரங்களிலும் கழிவு நீா் சுத்திகரிப்புத் திட்டம் 2020க்குள் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஒப்பந்தங்களும் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், செயற்திட்ட முகாமையாளர் டி.வி. மெதவத்த, உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியளாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog