Breaking

Thursday

கடற்றொழில் நீரியல் வளப்பிரதியமைச்சராக எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கடமைகளைப் பொறுப்பேற்றார்.


கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளை இன்று வியாழக்கிழமை கடற்தொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் பொறுப்பேற்றனர். 

இதன் போது, கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர் வஜித் விஜிதமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் துலிப் வேத ஆராய்ச்சி, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தங்களது கடமைகளைப் பொறுபேற்கும் நிகழ்வு இல.492, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை கொழும்பு – 03 எனும் முகவரியில் அமைந்துள்ள கடற்றொழில் நீரியல் வள மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,  அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இங்கு சமய பெரியார்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெற்றதன் பிற்பாடு கடற்றொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அஸீம் கிலாப்தீன்    








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog