Breaking

Tuesday

மீனாட்சியம்மனாலய தரிசனத்தில் ஆனந்தசங்கரி !


காரைதீவு  நிருபர் சகா

தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடந்த 3தினங்களாக  அம்பாறை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

நேற்றுமுன்தினம்(29)  சித்ராபௌர்ணமியன்று  அவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மீனாட்சிஅம்பாள் ஆலயத்திற்கு விஜயம் செய்தார். கூடவே அவருடன் அவரது செயலாளர் பி.சங்கையா கல்முனை மாநகர பிரதிமேயர் காத்தமுத்து கணேஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.

ஆலயத்திற்கு வருகை தந்த 85வயதான தலைவர் வீ.ஆனந்தசங்கரியை ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் வரவேற்றார்.
ஆலயத்தைச் சுற்றிபார்த்த பின்னர் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன ஆலயச்சிதைவுகளையும் பார்வையிட்டார்.

அங்கு வந்திருந்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உறுப்பினர்களான பா.மோகனதாஸ் மு.காண்டீபன் சி.ஜெயராணி உள்ளிட்ட அரசியல்பிரமுகர்களும் பொதுமக்களும் சந்தித்துக் கலந்துரையாடினர். 

கடந்தவருடம் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டநிலையில் 2ஆம் இடம்பெற்ற மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையைச்சேர்ந்த மாணவி  சுதர்சன் டிவானுஜாவையை ஆனந்தசங்கரி ஆலயசந்நிதானத்தில் பாராட்டினார்.







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog