Breaking

Tuesday

சம்மாந்துறையைச் சேர்ந்த வீரத் தளபதி பற்றிய ஆய்வு.!வடசென்னையில் கற்றோர்கள், சான்றோர்கள் புடைசூழ கௌரவம்.


நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து அழைக்கப்பட்டிருந்த எனக்கு -  "இலங்கை சிங்கள மன்னர்களின் ஆட்சியை நிலைநிறுத்த தோலோடு தோல் நின்றவர்கள் முஸ்லிம்களே! அந்த வகையில் கி.பி.1798 களில் அந்நியர்க்கு எதிராக போராடிய வீரத் தளபதிகள் பற்றிய ஆய்வுப் பார்வையில் - "சம்மாந்துறையைச் சேர்ந்த தளபதி அவக்கர் ஈஸா முகாந்திரம்." எனும் ஆய்வுரையினை நிகழ்த்த வாய்ப்புக் கிட்டியது.

இது தென்னிந்திய -கவி ஓவியா கலை இலக்கிய மன்றம் நடாத்தும் "உலக புத்தக தின விழாவும், நூல்கள் வெளியீட்டு விழாவும், இலக்கியவாதிகள் பாராட்டு விழாவும்" சென்னை- எழும்பூர், பாந்தியன் சாலையிலுள்ள 107 இலக்க - இக்சா மையத்தில் இடம்பெற்றது.

எனக்கு கற்றோர்கள், சான்றோர்கள் புடைசூழ "கௌரவமும் வழங்கப்பட்டமை" மன மகிழ்வினைத் தந்தது.

வடசென்னை தமிழ்ச் சங்கத் தலைவர்-கவிஞர் - எ.த. இளங்கோ , கவி ஓவியா இதழின் பிரதம ஆசிரியர்- கவிஞர். இளைய பாரதி மற்றும் நகைச்சுவை சிந்தனையாளர் , ஆங்கிலப் பேச்சாளர் , புகைப்படக் கலைஞர் , புகழ்பெற்ற கவிஞர்- நம்ம ஊர் கோபிநாத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog