Breaking

Friday

மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி மஹிந்த முஸ்லிம்களை கௌரவித்தார் ..


மேல் மாகாண ஆளுனர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கிஅவர்முஸ்லிம்களை கௌரவித்தார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைஇனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகம் ஊட்ட விரும்புதாகஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

புதிய ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்,

இந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்லஅதற்கு நீண்டதொருவரலாறுண்டுஎமது ஆட்சிக்காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியதுஅதற்கு,நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லைஎமது காலப்பகுதியில் இனவாதிகள்நின்ற வேகத்திற்குநாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும்நாடே சுடுகாடாகமாறியிருக்கும்.

இவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களைஎமதுஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போதுஎமது ஆட்சியின் அருமையைபுரிந்துகொள்ள முடியும்தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்இதில் ஒரு முஸ்லிம்ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாராஇந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோதடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள்ஒரு முஸ்லிம் ஆளுநராவதுநியமிக்கப்பட்டுள்ளாரா?

எமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராகசகலவிதமானஅதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார்இலங்கையில் உள்ளமாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானதுஅதற்கு நாம் முஸ்லிம் ஒருவரைஆளுநராக நியமித்திருந்தமையேஎமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்துகொள்ள போதுமானதாகும்.

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில்எமதுஉதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் சபைத் தலைவர்களாகியுள்ளனர்.பல சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம்ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின்பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும் அவர்களுக்கு எந்த விதமானகௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளுகீரையாகவே பயன்படுத்தி வருகிறது என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog