Breaking

Thursday

நூல்நிலையத்தில் தீ!


காரைதீவு  நிருபர் சகா
காரைதீவு பிரதேசசபைக்குட்பட்;ட மாளிகைக்காடு உப நூல் நிலையத்தில் தீ ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு (17)இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைகேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக அங்கு சென்று பார்வையிட்டு உரிய நூலகரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டார்.

அங்கு பத்திரிகைகள் எரியூட்டப்பட்டிருந்தன. அலுமாரியொன்றில் கண்ணாடி சேதமாக்கப்பட்டிருந்தது.

இனந்தெரியாத விசமிகள் தீவைத்திருக்கலாமென நம்பப்படுகின்றது. விசாரணை  தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog