Breaking

Monday

காலம் சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் 25வது மறைவு தினம் மே 1ஆம் திகதி.


(அஷ்ரப் ஏ சமத்)

காலம் சென்ற  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் 25வது  மறைவு தினம் மே 1ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு  கொழும்பு அளுத்கடையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக பல்வேறு நிகழ்வுகள்  நாளை காலை 08.30 மணிக்கு  அமைச்சா் சஜித் பிரேமதாச அவா்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க  ஆகியோா்  கலந்து கொள்ள உள்ளனா்.  இந் நிகழ்வின் போது பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்க்பபடும்.   கொழும்பு மாவட்டத்தில் வாழும் வீடற்ற வறியவ குடும்பங்களுக்கு  வீடமைப்புக் கடன் வழங்குதல்,  கொழும்பில் தேசிய வீடமைப்பு தொகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்  வழங்கி வைக்கப்படும் இதில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வாா்கள்.  அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமய வழிபாடுகளும் நடைபெறும் 

ரணசிங்க பிரேமதாச 1993 மே மாதம் 1ஆம் திகதி   ஜ.தே.கட்சியின் மே தின ஊா்வலத்தில் பயங்கரவாதிகளின் தக்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தாா்.  அவா் ஏழைமக்களின் தோழனாக  நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தாா்.  10 இலட்சம வீடமைப்புத் திட்டம், கிராமோதாய, ஜனசக்தி, கம்உதாவ, 200 ஆடை தொழிற்சாலை போன்ற பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து இலங்கையின் நழிவுற்ற் மக்களுக்காக தன்னையே அர்பபணித்த ஒர் உதார புருஷா்  
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog