Breaking

Wednesday

கரையோரப்பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது!


அம்பாறை மாவட்டத்தில் நேற்றைய தினம் அமைதியற்று காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் மாவட்டத்தின் கரையோர பிதேசம் வழமைக்கு திரும்பியுள்ளது.இந்நிலையில், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், சந்தைகள் என்பன வழமைபோல இயங்கின. இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் என்று வதந்திகள் வெளியாகியிருந்த போதிலும் வழமைபோல் இயங்கின.

அனைத்து கடைகளும், பாடசாலைகளும் அலுவலகங்களும் திறந்திருந்தன. இருந்தபோதிலும் மாணவர்களின் வரவு வெகுவாகக் குறைந்திருந்தன.இன்று கல்முனை நகரம் வழமைபோன்று இயல்பு நிலையிலுள்ளது. கல்முனை நகரிலுள்ள உவெஸ்லி பற்றிமா போன்ற பெரிய பாடசாலைகள் வழமைபோல் இயங்கின.தனியார் பேருந்துகள் பெரும்பாலானவை இயங்கவில்லை. 

எனினும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன.கல்முனை, அக்கரைப்பற்று வீதியில் பாலமுனை என்ற இடத்தில் இன்று காலையில் வீதிதடைபோட்டு சிறு பதட்டம் நிலவியபோதிலும் சற்றுநேரத்தில் இராணுவம் வரவழைக்கப்பட்டதும் நிலைமை சுமூகமாக மாறியது.போக்குவரத்தும் இடம்பெற்றது. 

அம்பாறை நகரில் பணியாற்றும் சிறுபாண்மையின ஊழியர்கள் பெரும்பாலும் இன்று பணிக்குச்செல்லவில்லையனெத் தெரிகிறது.இதனிடையே, கல்முனையிலுள்ள ஒரேயொரு சிங்களப் பாடசாலையான “சிங்கள மகா வித்தியாலயம் இன்று இயங்கவில்லை. மாணவரும் ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இயங்கவில்லை எனத் தெரியவருகிறது.

நேற்றைய தினம் பாடசாலைக்குவந்த 6 சிங்கள ஆசிரியர்களும் கல்முனையின் பதட்டம் நிலவியதையடுத்து 9.30 மணியளில் பாதுகாப்புக்கருதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.பிற்பகல் 3 மணிவரை அவர்களால் வெளியேறமுடியாமலிருந்தது. 

கல்முனையின் பதற்ற நிலைமையே அதற்குக் காரணமாகும்.பின்னர் அவர்களையும் கல்முனையில் பணியாற்றும் சில தனியார் வங்கி பெரும்பான்மையின உத்தியோகத்தர்களையும் பிற்பகல் 3 மணியளவில் பொலிஸார் விசேடபாதுகாப்பு வழங்கி அம்பாறைக்குக்கொண்டு சென்று சேர்ப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog