Breaking

Monday

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைச்சரவை?


ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்க உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியுள்ள நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிற்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில், தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த தலைமையிலான எதிரணியில் இணையவுள்ளனர்.இந்த விடயம் குறித்து நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் விளக்கமளித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog