Breaking

Friday

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சிசபைத்தேர்தல் களநிலவரம்!


அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  மாவட்டத்திலுள்ள 20சபைகளிலும் 378ஆசனங்களை இலக்குவைத்து 2837 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பலகட்சிகளும் 16 சுயேச்சைக்குழுக்களும் களத்தில் குதித்துள்ளன.மொத்தமாக 6கட்சிகளினதும் 4சுயேச்சை அணிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 6லட்சத்து 48ஆயிரத்து 57 பேரைக்கொண்ட  கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 44.0வீதம் முஸ்லிம்களும் 37.5வீதம் சிங்களவர்களும் 18.3வீதம் தமிழ்மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.
4415 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளும் 20 உள்ளுராட்சிமன்றங்களும் 20 பிரதேச செயலகங்களும் 503 கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளன.

உள்ளுராட்சி மன்றங்களைப்பொறுத்தவரை கல்முனை அக்கரைப்பற்று ஆகிய 2 மாநகரசபைகளையும் அம்பாறை நகரசபையையும் மீதி 17 பிரதேசசபைகளையும் கொண்டது இம் மாவட்டம்.

மொத்தமாகவுள்ள 20சபைகளில் சம்மாந்துறை பிரதேசசபையில் 3அங்கத்தவர் வட்டாரமொன்றும் கல்முனை மாநகரசபை மற்றும் நாவிதன்வெளி இறக்காமம் ஆகிய பிரதேசபைகளில் இரட்டை அங்கத்தவர் கொண்ட வட்டாரமும் உள்ளன. ஏனைய 16சபைகளும் ஒற்றை அங்கத்தவர் கொண்ட வட்டாரங்களைக்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



மாவட்டத்தில் பெண்கள் முதற்பட்டியலில் 200பேரும்   இரண்டாம் பட்டியலில் 628 பேருமாக 828பேர் களத்தில் குதித்துள்ளனர். இவர்களில் 91பேர் தெரிவுசெய்யப்படுவார்கள். 
மாவட்டத்தில் 20 சபைகளிலும் அதிகூடிய 13அணிகள் போட்டியிடுவதும் அதிகூடிய 559 வேட்பாளர்கள் போட்டியிடுவதும் கல்முனை மாநகரசபையில் மட்டுமே.

அடுத்ததாக 10அணிகள் சார்பில் 230 வேட்பாளர்கள் போட்டியிடுவது  பொத்துவில் பிரதேசசபையிலும் 8அணிகள் காரைதீவு பிரதேசசபையிலும் போட்டியிடுகின்றன.
ஆகக்குறைந்த அணிகள் அதாவது 4கட்சிகள் போட்டியிடுவது ஆலையடிவேம்பு இறக்காமம் அக்கரைப்பற்று லாகுகல ஆகிய பிரதேசசபைகளிலாகும். அக்கரைப்பற்று பிரதேசசபையில்தான் அதிகுறைந்த 44வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அடுத்ததாக 64வேட்பாளர்கள் இறக்காமத்தில் போட்டியிடுகின்றார்கள்.


கல்முனை மாநகரசபை!
கல்முனை மாநகரசபையானது 43வேட்பாளர்களைக்கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 10.
இம்முறை இச்சபைக்கு 9கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

கல்முனை மாநகரசபை தேசியமட்டத்தில் முக்கியத்துவம்பெற்றுப் பேசப்பட்டது. அதற்குக்காரணம் அங்குள்ள சாய்ந்தமருது பிரதேசம். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் இத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால் அவர்கள் கட்சிகளை வெறுத்து சுயேச்சையில் நிற்க ஊர்த்தீர்மானம் எடுத்து திவீரமாகச் செயற்பட்டனர்.

தமது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியுடன் கைகோர்த்து கல்முனை மாநகரசபை ஆட்சியதிகாரத்தை அமைப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளமையும் இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள பள்ளிவாசல் நிருவாகம் தேர்தல் செயற்பாடுகளைக் கiயாளுகின்றது. பள்ளிவாசலே அரசியல்களமாகவும் உள்ளதென்று எதிரணியினர் குற்றம் சாட்டிவந்த நேரத்தில் புதனன்று காலை பள்ளிவாசல் நிருவாகம் கலைக்கப்பட்டு இடைக்கால நிருவாகம் தோற்றுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கஅம்சமாகும்.

இதேவேளை இங்குள்ள 7வட்டாரங்கள் தமிழர் பிரதேசங்களாகும். அவற்றில் ஒன்று இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகும். கல்முனை நகரை உள்ளடக்கிய 12ஆம் வட்டாரம் அது. அங்கு தலா 4ஆயிரம் வாக்காளர்கள் இரு தரப்பிலும் உள்ளனர். எந்தக்கட்சி ஒருவாக்கால் கூடுகிறதோ அக்கட்சிக்கே இரு உறுப்பினர்களும் கிடைக்கும். எனவே அங்கு பலத்த போட்டி இடம்பெற சாத்தியமிருக்கிறது.


அக்கரைப்பற்று மாநகரசபை!
அக்கரைப்பற்று மாநகரசபையானது 23வேட்பாளர்களைக்கொண்டது. 20 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 05.
இம்முறை இச்சபைக்கு 6கட்சிகளும் 1சுயேச்சை அணியும் நியமனப்பத்திரங்களைத்தாக்கல் செய்தன.இருந்தும் 1கட்சியினதும்  1சுயேச்சை அணியினதும் பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆதலால் 5 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 115 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

அம்பாறை நகரசபை!
அம்பாறை நகரசபையானது 19வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 5 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 114 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 



தெஹியத்தகண்டிய பிரதேசசபை!
தெஹியத்தகண்டிய பிரதேசசபையானது 41வேட்பாளர்களைக்கொண்டது. 38 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 09.
இம்முறை இச்சபைக்கு 6கட்சிகளில் 1நிராகரிக்கப்பட 5 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 205 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

நாமல்ஓய பிரதேசபை!
நாமல்ஓய பிரதேசசபையானது 19வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 5 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 114 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 



தமண பிரதேசசபை!
தமண பிரதேசசபையானது 19வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 5 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 114 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

பதியத்தலாவ  பிரதேசசபை!
பதியத்தலாவ பிரதேசசபையானது 23வேட்பாளர்களைக்கொண்டது. 20 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 05.
இம்முறை இச்சபைக்கு 6கட்சிகளில் 1நிராகரிக்கப்பட 5 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 115 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

உகனை பிரதேசசபை!
உகனை பிரதேசசபையானது 31வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 07.
இம்முறை இச்சபைக்கு 5 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 186 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

மகாஓய  பிரதேசசபை!
மகாஓய பிரதேசசபையானது 21வேட்பாளர்களைக்கொண்டது. 18 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 5 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 105 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

லாகுகல  பிரதேசசபை!
லாகுகல பிரதேசசபையானது 21வேட்பாளர்களைக்கொண்டது. 18 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 84 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை  பிரதேசசபை!
அட்டாளைச்சேனை பிரதேசசபையானது 21வேட்பாளர்களைக்கொண்டது. 18 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 4 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 105 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

ஆலையடிவேம்பு பிரதேசசபை!
ஆலையடிவேம்பு பிரதேசசபையானது 19வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 5கட்சிகள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தன. இங்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் நியமனப்பத்திரம் உரிய முகவரால் கையளிக்கப்படாமையினால் நிராகரிக்கப்பட்டது. ஆதலால் 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜ.தே.கட்சி தமிழர்விடுதலைக்கூட்டணி ஸ்ரீல.சு.கட்சி ஆகிய 4கட்சிகளின் சார்பில்  இங்கு 76வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 


நாவிதன்வெளி  பிரதேசசபை!
நாவிதன்வெளி பிரதேசசபையானது 16வேட்பாளர்களைக்கொண்டது. 13 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 03.
இம்முறை இச்சபைக்கு 6கட்சிகளும் 2சுயேச்சைகளும் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தன. 1சுயேச்சை நிராகரிக்கப்பட 6 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அக்கரைப்பற்று  பிரதேசசபை!
அக்கரைப்பற்று பிரதேசசபையானது 11வேட்பாளர்களைக்கொண்டது. 08 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 02.
இம்முறை இச்சபைக்கு 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 44 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

காரைதீவு  பிரதேசசபை!
காரைதீவு பிரதேசசபையானது 14வேட்பாளர்களைக்கொண்டது. 11 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் தெரிவாகும் பெண்கள் தொகை 02.
இம்முறை இச்சபைக்கு 6 கட்சிகளும் 2சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி  ஜ.தே.கட்சி தமிழர்விடுதலைக்கூட்டணி ஸ்ரீல.சு.கட்சி அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் ஸ்ரீல.மு.காங்கிரஸ் ஆகிய 6கட்சிகள் மற்றும் 2சுயேச்சைகளின் சார்பில்  இங்கு 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

பொத்துவில் பிரதேசசபை!
பொத்துவில் பிரதேசசபையானது 23வேட்பாளர்களைக்கொண்டது. 20உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 05.
இம்முறை இச்சபைக்கு 9 கட்சிகளும் 1சுயேச்சையும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 230 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

நிந்தவூர் பிரதேசசபை!
நிந்தவூர் பிரதேசசபையானது 16வேட்பாளர்களைக்கொண்டது. 13உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 03.
இம்முறை இச்சபைக்கு 4 கட்சிகளும் 3சுயேச்சைகளும் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேசசபை!
திருக்கோவில் பிரதேசசபையானது 19வேட்பாளர்களைக்கொண்டது. 16 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 04.
இம்முறை இச்சபைக்கு 7 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 133 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

சம்மாந்துறை பிரதேசசபை!
சம்மாந்துறை பிரதேசசபையானது 23வேட்பாளர்களைக்கொண்டது. 20 உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 05.
இம்முறை இச்சபைக்கு 8கட்சிகள் தாக்கல் செய்திருந்தும் 2கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே  6 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 138 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். 

இறக்காமம் பிரதேசசபை!
இறக்காமம் பிரதேசசபையானது 16வேட்பாளர்களைக்கொண்டது. 13உறுப்பினர்கள் தெரிவாவர். அவர்களில் பெண்கள் தொகை 03.
இம்முறை இச்சபைக்கு 4 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆதலால் இங்கு 64 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

புதிய கலப்புமுறைத் தேர்தல் என்பதால்  வாக்களிப்பு வாக்கெண்ணுதல் எல்லாம் புதியமுறையிலாகும். இதற்கு வாக்காளர்கள் நேரஅவகாசத்தோடு விழிப்புணர்வுக்குட்படுத்தப்படாதது ஒரு குறைபாடாகவே கருதவேண்டியுள்ளது. இன்னமும் எத்தனையாம் இலக்கத்திற்கு வாக்களிப்பது என்ற கேள்வியுடன் பல வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தமாகவுள்ள 20சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை வெற்றிகொள்ளப்போவது யார் என்பது 11ஆம் திகதி தெரியவரும். குறிப்பாக தமிழ் பேசும் பகுதிகளில் வழமையான பாணியில் தேர்தல் முடிவை எதிர்பார்க்கமுடியாது.

தமிழர் முஸ்லிம் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றுள்ள பிரதான கட்சிகள் இம்முறை தமது சுயமதிப்பீட்டை மீண்டுமொருமுறை  பரீட்சிக்கவுள்ளன. சர்வதேச தேசிய விவகாரங்களை இந்த கிராமமட்டத்தேர்தல் காலத்திலும்கூறி மக்களை ஏமாற்றமுனைகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றன.எனவே இக்ட்சிகள் குறிப்பிடத்தக்க அடைவை அடையுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
இம்முறை களநிலவரம் முற்றாக மாறியுள்ளதனால் எதிர்பார்க்கும் பெறுபேறு கிடைக்குமா என்பது சந்தேகமே.

வி.ரி.சகாதேவராஜா




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog