Breaking

Sunday

சம்மாந்துறை மண்ணுக்கு பாரிய அநீதி இழைத்த முன்னாள் தவிசாளர் நௌஷாத்...!


சம்மாந்துறை மண்ணுக்கு பாரிய அநீதி இழைத்த முன்னாள் தவிசாளர் நௌஷாத்துக்கு எதிர்வருகின்ற தேர்தலில் சம்மாந்துறை மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். மன்சூர் எம்.பி. தெரிவிப்பு....

சம்மாந்துறை பிரதேச சபையின் வட்டார எல்லை நிர்ணயத்தில் எவருடைய ஆலோசனைகளையும், பெறாமலும், தன்னிச்கையாக முடிவெடுத்து சம்மாந்துறை மண்ணுக்கு பாரிய அநீதி இழைத்த முன்னாள் தவிசாளர் நௌஷாத்துக்கு எதிர்வருகின்ற தேர்தலில் சம்மாந்துறை மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

அவர் போட்டியிடுகின்ற வீரமுனை வட்டாரத்திலிந்து பெப்ரவரி 10 ஆம் திகதி அவரைத் தோற்கடித்து நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அது ஒவ்வொரு சம்மாந்துறை மண்ணில் பிறந்த மக்களின் கடமையாகும். என திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று(05) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதிர் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - 
சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை நம்ப வேண்டும். எமது இயக்கத்தை நம்பாமல் கடந்த காலங்களில் யாரோயொரு தனிநபர்களை நம்பி பிழையான வழிகேட்டில் சென்று மிகப் பிழையான தீர்மானங்களை உடுத்து பேரழிவுக்கு இட்டுச் சென்று வரலாறு பதியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியில் வலம் வந்து தனக்கென்ற கொள்கை இல்லாமல், தன்னுடைய முடிவுகளை மாற்றி அந்தக் கொள்கையின் பிரகாரம் சம்மாந்துறை மக்கள் எல்லோரும் பயணிக்க வேண்டும் என்று அரசியல் செய்கின்ற நௌஷாத், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வந்து மீண்டும் தவிசாளராக வரவேண்டுமென சம்மாந்துறை மக்களிடம் ஆணை கேட்பது இம்மண்ணில் பிறந்த மக்கள் அனைவரையும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.

இதற்கு மக்கள் தகுந்த பாடத்தினை இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். 
சம்மாந்துறை பிரதேச சபையின் வட்டார எல்லைகளை அறிவுபுர்வமாக மீள் நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவரினம் கருத்துகளையும், ஆலோசகைளையும், ஒவ்வொரு பிரதேச மக்களின் ஆலோசனைகளை பெற வேண்டும்.

அதற்கு சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் போராட்டத்தில் அனைத்து சம்மாந்துறை மக்களும் வெற்றியின் பங்காளர்களாக மாற வேண்டும். 
இதில் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெருந்திரளான கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.
by-Mohamed Khan
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog