Breaking

Monday

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு பிரிவு கட்டிட திறப்பு விழா...


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை சுகாதாரபோசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் வைத்தியசாலை ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டதை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு பிரிவு கட்டிட திறப்பு விழாமும் இன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் றோஹித்த போகொல்லாகம, சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog