Breaking

Saturday

நேற்று சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப்பேரணி!


தனியான உள்ளூராட்சி மன்றத்தை வலியுறுத்தி நேற்று  (27)வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. 

சாய்ந்தமருது ஜூம்மாஆப் பள்ளிவாசல் இன்றைய வெள்ளித்தொழுகையின் பின்பு இப்பேரணி நடாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.பேரணியின்போது பலவித சுலோகங்களை மக்கள் வெளிப்படுத்தி சத்தமிட்டார்கள். 

சில கட்சிகளுக்கெதிரான கோசங்களும் கேட்டன. தமக்கு உரிய உள்ளுராட்சிசபையை தாமதமின்றி தரவேண்டும். இன்றேல் இங்கு கட்சிச்செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்றும் இவ்வாறான போராட்டம் மேலும்  வலுப்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவிடம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபாவினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

(படம்: காரைதீவு  நிருபர்)   




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog