Breaking

Friday

சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவை கொடுப்பனவுகளுக்காக சுமார் நான்கு கோடி ரூபா தேவை.....!


சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக நான்கு கோடி 31 இலட்சத்து 35 ஆயிரத்து 287 ரூபா 14 சதம் தேவை என சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதம கணக்காளர் கேந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,நிதிப் பற்றாக்குறையால் ஆசிரியர் சேவை உள்ளீர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகளின் போது சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவை வழங்க முடியாதுள்ளது.இந்த நிலுவை கொடுப்பனவைக் கோரி தினமும் ஆசிரியர்கள் வலயக் கல்வி அலுவலகம் வருகின்றனர்.

இதன் காரணமாக ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக சம்பள நிலுவைகள் தயாரிக்கப்பட்டு அதனை வழங்குவதற்கான கட்டு நிதியாக ரூபா. 43,135,287.14 வழங்குமாறு மாகாணக் கல்விப் பணிமனை ஊடாக, மாகாண திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.மேலும், இந்த நிதி கிடைக்கப்பெற்றதும் சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் கடமையாற்றும் சகல அதிபர், ஆசிரியர்களின் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog