Breaking

Sunday

சம்மாந்துறை 40 வீட்டுத்திட்ட பிரதேச வீதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க புணரமைப்பு.


சம்மாந்துறை சென்னல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலயத்திற்கு முன்னால் இருந்து 40 வீட்டுத்திட்டத்தினை ஊடாடறுத்து செல்லும் தைக்குவா பள்ளிவாசலை சென்றடையும் வீதியை புணரமைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இவ் வீதித் திருத்தம் தொடர்பாக கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 60 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் இவ் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வேலைகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரீ.உதயன், பிரதேச முக்கியஸ்தருடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog