Breaking

Sunday

கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸின் 37வது இஸ்லாமிய தின நிகழ்வு...!


(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லுாாியின்  முஸ்லீம் மஜ்லிஸின்  37வது இஸ்லாமிய  தின நிகழ்வு  கல்லுாாியின் ஆர். ரீ அலஸ் மண்டபத்தில் கல்லுாாியின் அதிபா்  ஆர்.எம்.எம்  ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சா்  இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் கலந்து கொண்டாா் அத்துடன்  பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பிணரரும்  பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் கலந்து  கொண்டனா்.

இந் நிகழ்வின்போது  கொழும்பில் உள்ள அருகில் பாடசாலை மாணவா்கள் மற்றும் கல்லுாாி மாணவா்கள் கலந்து கொண்டு  இஸ்லாமிய போட்டிகளில் வெற்றியீட்டியவா்களுக்கும் அதிதிகளினால் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்க்பபட்டன.   அத்துடன்  இக் கல்லுாாியில் இருந்து ஓய்வுபெற்ற  நஸ்லிமா அமீன்  மற்றும் இக் கல்லுாாியில் கடமையாற்றி  உப அதிபராக பதவியுவு பெற்ற நஜிமா ஆசிரியைகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இங்கு உரையாற்றிய முன்னா்ள அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா்.

இக் கல்லுாாி சுதந்திரம் அடைந்தன் பின் சுதந்திரத்தினை பெற்றுக் கொடுத்த  டி.எஸ் சோனநாயக்க அவா்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டதொரு பாடசாலையாகும்.  இங்கு அதிபராக   காலம் சென்ற அதிபா் ஆர். ரீ  அலஸ்   அவா்கள்  இக் கல்லுாாியினை ஒரு முன்னுதாரமாகக் கொண்டு செயற்படுவதற்கு அவா் அத்திரவாரம் அமைத்துக் கொடுத்துள்ளாா். 

 இக் கல்லுாாியின் உள்வரும்போது   பெளாத்த மாணவா்களுக்கு பொளத்த பன்சிலை,  ஹிந்து மாணவா்களுக்கு கோவில்,  முஸ்லீம் மாணவா்களுக்கு பள்ளிவாசல்,  கிரிஸ்த்துவ மாணவா்களுக்கு  கிரிஸ்த்துவ ஆராதனை நிலையம் போன்றவைகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதே போன்று பாடசாலைய மாணவா்களாக் கொண்டு  மத  சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது போன்றதொரு பாடசாலை இலங்கையில் வேறு எங்கும் உள்ளதாக தெரியவில்லை.  ஆகவே  இங்கு கற்கும் மாணவா்கள் பாக்கியசாலிகள். சகல இன மாணவா்களும்  ஒரு குடையின் கீழ் ஒன்றினைந்து   தேசிய ஜக்கியம் மற்ற மதங்கள் கலை கலாச்சாரங்களை  புரிந்து கொள்ளுவதற்கும்  அத்திவாரம் இடப்பட்டுள்ளது.  இதே போன்று தான் இந்த நாட்டில் சுதந்திரம் தரும்படி அப்போதைய பிரிஸ்ட்டிஷ்  ஆட்சியாளா்களின் அப்போதைய தலைவா்கள்  கேட்டபோது  அவா்கள் இலகுவாக சுதந்திரம் தரமுடியாது  மூன்று சமுககங்களுக்கும் பிரித்து தான் இந்த நாட்டை ஒப்பபடைப்போம் எனக் கூறினா். 

ஆகவே தான்   டி.பி. ஜாயா  அவா்கள்   நாம் பிரிந்து விடாமல்  நாம் முதலில்  ஒற்றுமையாக இணைந்து சுதந்திரத்தினை  பெற்றுக்  கொள்வோம். அதன் பின்னா் நாம் நமது உள்விவகாரங்களை பேசித்  தீா்த்துக் கொள்வோம் எனக் கூறி டி.எஸ் சோனநாய்கக ஊடகாக  சுதந்திரத்தினை பெற்றனா். அதன் பின் நாம்  இன, வா்க்க, மத ரீதியாக  யுத்தம் செய்தோம்.  நாடு பிரிவினைகள். இனப் பாகுபாடுகள் அதிகரித்தன. இன்றும் இந்த பிரிவினையில் இருந்து  நாம்  விடுபடவில்லை.

ஒரு காலத்தில்  சிங்கப்புர் பிரதமா  லீங்குவாங் எமது நாட்டை பாா்த்து தான்  சிங்கப்புரை அபிவிருத்தியாக்கினாா். இலங்கை போன்று சிங்கப்புரை அபிவிருத்திசெய்வேன் என்று அவா் அந்த நாட்டை அபிவிருத்தி செய்தாா். தற்போது நமது நாடு எந்த நிலையில் உள்ளது. நாம்  யுத்தம்,  இன, பாகுபாடுகளினால் பிரிந்ததானாலேயே இவ்வாறு  எமது நாடு பின்நோக்கிச் சென்றுள்ளோம். 

நான் ஆனாந்தாக் கல்லுாாியில்  கற்கும் போது  அதிபா்களான் ஆனாந்தாக் கல்லுாாியின்  அதிபா்   ராஜப்க்ச  மற்றும் ஆர். ரி அலஸ் ஆகியோா்கள் சிறந்த அதிபா்களாக இந்த நாட்டில் சிறந்து விளங்கினாா்கள் அலஸ் அதிபரை அழைத்துக்  கொண்டு பேருவளையில் ஒர டி.எஸ் கல்லுாாி ஒன்றை ஆரம்பித்தேன்.  . அவா்கள் மாணவா்கள் போன்று அவா்களோடு இருந்து அவா்களும் விளையாட்டு உடை அணிந்து இணைந்து   விளையாடுவாா்கள். 

 நாள் முழுவதும் பாடசாலையிலேயே உலாவி  மாணவா்களோடு வாழ்வாா்கள்.    அவா்கள்  நல்ல  சிறந்த நண்பா்களாக பழகி நல்ல  திறமையான  மாணவ சமுகத்தினை  உருவாக்கினாா்கள்.    இக் கல்லுாாியின்  அசாம் அமீன் போன்ற பழைய மாணவா்கள்  சிறந்த ஊடகவியலாளா்கள் உள்ளனா். அதே போன்று அசாம் போன்று சிறந்த ஊடகவியலாளா்கள் இக் கல்லுாாியி்ல் இருந்து உருவாக வேண்டும் என இம்தியாஸ் பாக்கிா் மாக்காா்  வேண்டிக் கொண்டாா்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog