Breaking

Thursday

இலங்கை வீரர்கள் கலந்துக்கொண்ட T20 தொடரில் குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!


ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் இலங்கை உட்பட சிம்பாப்வே, மே.தீவுகள், ஓமான் மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இருபதுக்கு-20 போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் நேற்றைய போட்டி ஆரம்பமாகவிருந்த, காபுல் சர்வதேச மைதானத்துக்கு அருகில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டித் தொடரில் இலங்கை அணியைச் சுர்ந்த அஷான் பிரியஞ்சன் விளையாடுவதுடன், போட்டி மத்தியஸ்தராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் கிரகம் லெப்ரோய் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை இலங்கையிலிருந்து இந்த போட்டித் தொடருக்கு மஹுரூப் மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும், செல்லவிருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிரிக்கெட் சபையின், உயர் அதிகாரி ஒருவர் வீரர்கள் அங்கு செல்வது பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சென்றுள்ள வீரர்கள் தொடர்பில் கிரிக்கெட் சபை ஒருபோதும் பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்குள்ள வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலால் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் கிரிக்கட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

BY-tamilsportsnews
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog