Breaking

Friday

மெக்சிகோவை உலுக்கிய 8.2 நிலநடுக்கம்: பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை..


மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டில் தங்கள் நாட்டில் நடந்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அதை அந்நாட்டு அதிபர் விவரித்துள்ளார்.

அதன் அண்டை நாடான குவாட்டிமாலாவிலும் இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க அரசின் அங்கமான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவாதியுள்ளதாகக் கூறினாலும், அது இன்னும் கூடுதலாக மெக்சிகோவில் அளவிடப்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 8.2 என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார்.

பசிஃபிக் பெருங்கடலுக்கு அடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே கூறியுள்ளது.
மெக்சிகோவின் பிஜிஜியாப்பன் நகரில் இருந்து தென்மேற்குத் திசையில் 87 கிலோ மீட்டர் தொலைவில் பசிஃபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரீன்விச் நேரப்படி 04.50க்கு ஏற்பட்டு, சுமார் ஒரு நிமிட நேரம் நீடித்த அந்த நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் சுமார் 5 கோடி பேர் அந்நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார். 

மெக்சிகோவின் தெற்குப் பகுதியிலும், குவாட்டமாலாவின் மேற்குப் பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாட்டமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் நாட்டு மக்களை அமைதி காக்குமாறு ட்விட்டர் மற்றும் தொலைக்காட்சி வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெக்சிகோவின் இன்னொரு அண்டை நாடான அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளில் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுகடப்படவில்லை.
மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் 'கேட்டியா' என்னும் சூறாவளிக் காற்றால் மெக்சிகோவின் கிழக்கு கடலோரப் பகுதிகளும் ஏற்கனவே அச்சுறுதலைச் சந்தித்து வருகின்றன.
by-bbc
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog