Breaking

Monday

சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளிஅம்பாள் ஆலய தீமிப்பு உற்சவம் ஆரம்பம்!


காரைதீவு நிருபர் சகா

சுமர்h 2000ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவம் இன்று  11ஆம் திகதி திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

ஆலய பிரதமபூசகர் கு.லோகேஸ் தலைமையில் தொடர்ந்து 9தினங்கள் உற்சவகால கிரியைகள்  நடைபெறும். இணைப்பூசகராக காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய முன்னாள் கப்புகனார் க.பாஸ்கரன் செயலாற்றுவார்.

மூன்றாம்நாள் 13ஆம் திகதி புதன்கிழமை காலை ஸ்ரீ கோரக்கர்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம்பெறும் 

10ஆம் நாள் 20ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30மணிக்கு மஞ்சள்குளித்து தீமிதிப்பு பைபவம் இடம்பெறவிருப்பதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இவ்வாலயத்தின் தீமிதிப்பு வைபவத்தை தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியோன்யமாக இருந்து கண்டுகளிப்பது வழமையாகும். 

27ஆம் திகதி புதன்கிழமை மாலை இடும்பன் பூஜையும் 30ஆம் திகதி கௌரிவிரதம் வழமைபோன்று அனுஸ்ட்டிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog