Breaking

Wednesday

ரோஹிங்கிய முஸ்ஸிம் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்.


மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து சம்மாந்துறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறையின் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு சமூக நீதிக்கான சம்மாந்துறை சமுக சேவை அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் எம் எஸ் யாஸ்தீன் JP அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் நடந்து வருகின்ற ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன படுகொலையை கண்டித்தும், ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முழு உலக நாட்டுத்தலைவர்களும் முன்வர வேண்டுமென்றும் கவனயீர்ப்பு போராட்டம்.


வரும் வெள்ளிக்கிழமை மதியம் 01.30 மணிக்கு சம்மாந்துறை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கண்டனத்தை தெரிவிக்க மனித நேயமிக்கவர்கள் ஒன்று கூடுவோம்.

ஏற்பாடு:

சமூக நீதிக்கான சம்மாந்துறை சமுக சேவை அமைப்பு – அம்பாறை மாவட்டம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog