Breaking

Wednesday

சம்மாந்துறை வைத்தியசாலை மாடு அடைக்கத்தான் லாயக்கு....!மக்கள் மயமாக்கப்பட வேண்டிய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை.


சுமார் 75000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பொறுப்பான சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது 1923 ல் சுற்றுலா நிலையமாக ஆரம்பிக்கப்பட்டு 2007 ல் TypeB மாகாண ஆதார வைத்திய சாலையாக வளர்ந்து ஒரு தசாப்த காலமாக அதே நிலையில் காணப்படுகின்றது. நாலாபுரமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல்களால் சூழப்பட்டு காணப்படும் சம்மாந்துறை ஊருக்கு நம்பிக்கை ஊட்டும் வைத்தியசாலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையாகும்.

முப்பெரும் சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறந்த ஊரே சம்மாந்துறை ஊராகும்.

இப்படியான ஊருக்கு ஒரு சிறந்த தரமுயர்ந்த வைத்திய சாலையில்லாமை யாருடைய தவறு.???

நமது வைத்தியசாலை முன்னேற வேண்டுமென்றால் நமதூர் மக்களின் மனநிலை ஒற்றுமைப்பட வேண்டும். நாம் ஒரு நேர் சிந்தனையாளர்களாக (Positive thinkers) இருக்க வேண்டும். குறை கூறிக் கொண்டு திரிவோமானால் நாம் எவ்வாறு முன்னேறுவது.

" ( பிறரைக்) குறைகூறி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்" ( 104- 01)

நாம் செய்யப்படும் சேவைகளை மதிப்பதோடு இன்னும் செய்ய தூண்டுமளவிற்கு நடக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நல்லது செய்யும் போது அதை இவ்வாறு அல்லது அவ்வாறு என்று குறைகளையும் கோணல்களையும் காண முற்படுவது எந்த விதத்தில் நியாயம். நாம் நன்றி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

சம்மாந்துறைக்கு ஒரு மக்கள் பிரதி நிதியே இல்லாத காலத்தில் நமது வைத்தியசாலை தரம் B ஆக இருந்த போதும் கூட நமது மக்கள் என்ன சொன்னார்கள் என்பதை சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

" சம்மாந்துறை வைத்தியசாலை மாடு அடைக்கத்தான் லாயக்கு" என்று கூறியவர்கள் எங்கே!!!

இவ்வாறான நிலைமையை மாற்றியவர் யார்?

பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி இல்லாத காலத்தில் மாகாண சபைப் பிரதிநிதியாகவும் சுகாதார அமைச்சராகவும் இருந்த, தற்போதைய எங்கள் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி மதிப்பிற்குரிய கௌரவ MIM மன்சூர் MP அவர்களின் வருகையின் பின்பு நிலைமை மாறியதை நம்மால் இல்லையென்று சொல்லிவிட முடியுமா!

அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவியேற்றதில் இருந்து அடிக்கடி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலைக்கு விஜயம் செய்து பல ஒன்று கூடல்களை கூட்டி பெயரளவில் மாகாண Type B ஆகவும் சேவை, செயல் , வளம் அளவில் மாவட்ட வைத்தியசாலை யாகவும் காணப்பட்ட எமது வைத்திய சாலையை மாகாண Type B வைத்திய சாலையினது வளத்தை விடவும் அதிகாமான வளத்தை வழங்கியதை நமதூர் மக்களுக்கு தெளிவூட்டுவது எங்களது கட்டாயக் கடமையாகும்.

கௌரவ MIM Mansoor MP அவர்களின் மாகாண சுகாதார அமைச்சுக் காலத்தில் இலங்கையில் 'சம்மாந்துறை ஊரும் அதில் ஒரு வைத்தியசாலையும்' என பேசு மளவிற்கு கொடிகட்டிப் பறந்தது.

சம்மாந்துறையின் முதல் சத்திர சிகிச்சை நிபுணராக Dr AWM Sameem Consultant Surgoen அவர்கள் சேவை செய்த காலத்தில் மேற்கில் பேருவளை வடக்கில் பொலனறுவை தெற்கில் பொத்துவில் என பல ஊர்களிலிருந்தும் நோயாளிகள் குவிந்த போது ஏற்பட்ட சவால்களை வெல்வதில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் முன்னால் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராள மண்ற உறுப்பினருமான கௌரவ MIM Mansoor MP அவர்கள்.

Dr AWM Sameem consultant Surgeon அவர்கள் அடிக்கடி கௌரவ MIM Mansoor MP அவர்களின் அபிவிருத்தி ரீதியான ஒத்துழைப்பை ஞாபகப் படுத்துவார்.

கௌரவ MIM Mansoor MP அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார சபை அமைச்சராக இருந்த போது அவர் கிழக்கு மாகாணத்துக்கு சுகாதார அமைச்சரா அல்லது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சரா என்று வெளியூர் மக்கள் கேள்வி கேட்கு மளவிற்கு சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையுடன் அதிகளவு அக்கரையுடன் இருந்தார்.

அவரின் மனதில் உள்ள கவலையை அடிக்கடி பல ஒன்று கூடல்களில் ஞாபக மூட்டும் விடயம் என்னவென்றால் அவரின் குழந்தை யொன்று சம்மாந்துறை வைத்திய சாலையில் முதிராக் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் (PBU) இல்லாமல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மௌத்தானதையேயாகும்.

தனக்கு நடந்தது தனது ஊர் மக்களுக்கு நடக்கக் கூடாது என்று பல மில்லியன் செலவில் முதிராக் குழந்தைகள் பிரிவை (PBU) ஆரம்பித்தார். அதன் பிற்பாடு 24 மணி நேரமும் எந்தவொரு ஐயமுமின்றி சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பும் ,சாதாரண குழந்தை பிறப்பும் நடைபெறுவது நமதூர் மக்களுக்கு கிடைந்த மிகப் பெரும் வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தாதியர்களினதும் சுகாதார ஊழியர்களினதும் எண்ணிக்கையை Type B மாகாண சபைக்குக் கீழே காணப்படும் ஆதார வைத்திய சாலையில் அதிக ஊழியர்கள் ( OverStaffed) என்று பிராந்திய(RDHS), மகாண( PDHS) மட்டங்கள் கூறு மளவிற்கு அதிகரித்தார்.

மேலும்,

வைத்தியர்களுக்கு தங்குமிட விடுதி( Quarters for medical officers) கட்டப்பட்டு கையளிக்கப்பட்டது.வெளி ஊர்களில் இருந்து வரும் வைத்தியர்களுக்கு இது ஒரு இன்றியமையாத சேவையாகும்.

X-ray எடுப்பதற்காக வெளி வைத்திய சாலைகளுக்கு Ambulance மூலம் நோயாளிகள் அனுப்பப் பட்டிருந்த வேளை X-ray machine உம் Mobile X-ray ஒன்றும் வழங்கப்பட்டது. இம் Mobile X-ray மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு கட்டிலில் வைத்தே X-ray எடுக்கப்படும்.இது விபத்துக்குள்ளான நோயாளிகளுக்கு பெரும் தேவையுள்ள விடயமாகும்.

அத்தோடு இன்னுமொரு X-ray Technician உம் சேவைக்காக சேர்க்கப்பட்டார்.

நமதூரிலே தொற்றா நோய்கள் ( சீனி , பிரசர் கொலஸ்திரோல், இதய வருத்தம் ) அதிகரித்து வருவதால் அவற்றை ஆரம்பத்திலே கண்டு பிடித்து அதற்கான அறிவுரைகளை வழங்கும் தொற்றா நோய்க் கிளினிக் கட்டிடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் அவருடைய சுகாதார அமைச்சுக்காலத்திலே நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சில சேவைகள் அவர் பாராளுமன்றம் சென்ற பின்பே திறந்து வைக்கப்பட்டன. அவையாவன

* அவசர சிகிச்சைப் பிரிவும் வெளி நோயாளிப்பிரிவும் மாற்றி வடிவமைக்கப்பட்டமை.

இதில் வெளி நோயாளர் பிரிவுகள் தனித்தனி அறைகளாக மாற்றப் பட்டதோடு வெளி நோயாளர் மலசல கூடம், வைத்தியர் , தாதியர் தங்குமிட அறைகள் என பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

* இயன் மருத்துவ நிலையமும் இயன் மருத்துவ அதிகாரியும் ( Physiotherapy centre & Physiotherapist) -

Type B மாகாண சபை ஆதார வைத்திய சாலைக்கு அதி நவீன இயந்திரங்களைக் கொண்ட இயன் மருத்துவ நிலையம் வருவ தென்பது பெரும் விடயம்தான். இவ் இயன் மருத்துவ நிலையத்தில் நோயாளிகள் பயனடைவதை நீங்கள் உங்கள் வெற்றுக் கண்களால் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் நுளைவாயிலில் நின்று கொண்டே அவதானிக்கலாம். இது கௌரவ MIM மன்சூர் MP அவர்களின் சிறந்த சேவையென்றே கூறலாம்

* மருந்துக் களஞ்சியம் கட்டப்பட்டு கையளிக்கப் பட்டது.

மருந்துகளின் தரம் தன்மை தொழிற்பாடு போன்றன பாதிக்காமல் இருக்க சிறந்த மருந்துக்களஞ்சியம் தேவை. இதன் மூலம் மருந்துகளின் தொழிற்பாட்டைப் பேணலாம்.

* தாதியர் விடுதி புணர் நிர்மாணம்- இதுவும் ஒரு முக்கியமான தேவையாகக் காணப்பட்டிருந்தது.

* Covered way- மூடிய பாதை-

நோயாளிகளை விடுதிகளுக்கு கொண்டு செல்லும் போது மழை, வெயில் காரணமாக ஏற்படும் இடைஞ்சலை அவதானித்து Covered way போடப்பட்டது.

* மேலதிக MLT ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டதோடு விலை உயர்ந்த மருத்துவ பரிசோதனை செய்யும் உபகரங்களும் கையளிக்கப்பட்டன. இது எமது நோயாளிகளுக்கு கிடைத்துள்ள தேவையான விடயமாகும்.

*Ambulance parking உம் சாரதி விடுதியும் புதிதாக கட்டப்பட்டு கையளிக்கப்பட்டது.

இவ்வாறு பல கோடிகளை வழங்கி தனது சேவைகளை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சேவை செய்த கௌரவ MIM மன்சூர் MP அவர்களுக்கு பல கோடி நன்றிகள்.

Type A , அதிலும் உயர்ந்த தரத்தில் காணப்படும் வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை ( Endoscopy, Colonoscopy, Laparascopy, Computerized X-ray, & Modified dental Chair ) நம் மக்கள் பயன்பெறுவதற்காக கௌரவ MIM Mansoor MP அவர்களால் அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது அவற்றை வாங்குவதற்காக பல கோடி பெறுமதியான நிதி ஒதுக்கப்பட்டது. தற்போதைய மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM நஷீர் அவர்களின் முயற்சியின் காரணமாகவும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவ்வுபகரணங்கள் யாவும் ஒரே நாளில் கிடைக்கப் பெற்றது மறக்க முடியாத தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.நமது வைத்தியசாலையின் தரத்தையும் தாண்டிய சேவைதான் இது.

Endoscopy, Laparascopy, Colonoscopy மூலம் பல விசேடமான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது சம்மாந்துறை வைத்தியசாலயின் தரத்திற்கு கனவிலும் எட்டாத ஒரு நிகழ்வு மாதிரி இருந்தது.

தனது குறுகிய சுகாதார அமைச்சுக் காலப்பகுதியில் சம்மாந்துறை ஆதாரவைத்திய சாலையை Type B தரத்தின் வளத்தை மிஞ்சும் அளவிற்கு பல கோடி செலவு செய்து சேவைகளை செய்ததை யாராலும் மறுக்கமுடியுமா !

ஆஸ்பத்திரியின் அபிவிருத்திக்கு அரசியல் அத்தியவசியம்.

நமதூருக்கு நமது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மக்கள் பிரதிநிதியாக கௌரவ MIMமன்சூர் MP அவர்கள் இருப்பது பெரிய அதிஷ்டம் தான்.

Master plan யைப் பற்றி கௌரவ MIM மன்சூர் MP அவர்கள் கூறியதாவது, Master Plan நிதி ஒதுக்கீடு எல்லாம் முடிந்து விட்டது,

ஒரு வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என்று,

Type A ஆக மாற்றுவது பற்றிக் கூறியதாவது , சுகாதார, பிரதி சுகாதார அமைச்சர்கள், மற்றும் உயர் மட்டங்களின் பதில் Positive ஆக இருக்கின்றது. அதில் தொடர்ந்தும் முயற்சி செய்வதாகவும் , சரியாக வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சம்மாந்துறை வாழ் மக்களே! நமது வைத்தியசாலை யின் பிரச்சினைகள் , தேவைகள் போன்றவற்றை நாம் ஆராய வேண்டும். நமதூரில் 49 பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையின் கட்டுப்பாட்டில் இருந்தும் நாம் பள்ளிவாசல்கள் மீது கவனம் செலுத்துவது போல் ஏன் நமது வைத்திய சாலையில் கவனம் செலுத்துவதில்லை.

உதாரணமாக மாவனல்லை மக்கள் மகப் பேற்று விடுதியைப் பொறுப்பேற்று நடாத்துவது அவ்வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை செலுத்துகின்றது.

Medical Clinic எடுப்போமானால் கிட்டத்தட்ட 400-500 பேர் அதிகாலையில் இருந்து காத்திருந்து 2 அல்லது 3 வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப் படுகின்றார்கள். ஆனால் உதாரணமாக

அம்பாரை பொது வைத்திய சாலையிலும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையிலும் இதே எண்ணிக்கையான நோயாளிகளை 6-8 வைத்தியர்கள் பார்க்கிறார்கள்.

வெளி நோயாளர் பிரிவைப் பார்த்தால் எமது வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்கள் பார்வையிடும் நோயாளிகளை அங்கு 10 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பார்க்கின்றார்கள்.

விடுதிகளில் 2-3 வைத்தியர்கள் பார்க்கும் வேலையை அங்கு 6 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பார்க்கின்றார்கள்.

ஏன் என்று கேட்டால் நீங்கள் மாகாணம் அவர்கள் மத்திய அரசாங்கம்.

ஆனால் நாங்கள் ஒரே பல்கலைக் கழகத்தில் தான் படித்தோம். ஒரே சம்பளம் எடுக்கின்றோம்.

இவ்வாறு வித்தியாசமாக வேலை செய்வதற்கு என்ன காரணம்?

கௌரவ ஜனாதிபதியிடமும் சுகாதார அமைச்சிடமும் வேண்டுவது என்னவென்றால் அனைத்த (curative Care) வைத்திய சாலைகளையும் மத்திய அரசுக்குக் கீழே கொண்டுவருமாறு.

சம்மாந்துறை வாழ் மக்களே !

நமது ஊரின் சனத்தொகைக்கு நமது வைத்தியசாலை Type B மாகாண தரத்தில் இருப்பது போதாது.

நமது வைத்தியசாலையை

Type A மாகாணம் அல்லது

Type A மத்திய அரசு

என தரமுயர்த்த நாம் அனைவரும் ஒற்றுமையாய் நமது பாராளுமன்ற பிரநிதியாகிய கௌரவ MIM மன்சூர் MP அவர்களின் ஒத்துழைப்புடன் முயற்சிப்போம். வாருங்கள்.

" மக்கள் மயமாகி மக்கள் பிரதி நிதியுடன் நமது வைத்தியசாலையை தரமுயர்த்துவோம்"

இப்படிக்கு

சம்மாந்துறை வைத்திய சாலையின்
அபிவிருத்தியை விரும்பும் சம்மாந்துறை மகன்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog