Breaking

Monday

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்......!


(அஷ்ரப் ஏ சமத்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம்(09)  கல்கிசையில்  உள்ள தென்கிழக்கு கல்வி நிலையத்தில் உபவேந்தா் பேராசிரியா் எம்.எம். நாஜிம் தலைமையில்நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு கொழும்பில் உள்ள கைத்தொழில் சாா் சம்பந்தமான  நிறுவனங்களின் தலைவா்கள் பணிப்பாளா்கள் கலந்து கொண்டனா். 

 பல்வலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சிகளுக்கான இணைப்பாளா் கலாநிதி  ரீ.ஏ பியசிரி, தென்கிகழக்கு பல்கலைக்கழகத்தின்  இத்துறைக்கான பீடாதிபதி கலாநிதி எம். ஜி தாரிக்,  உயிரியல் விவசாயம் சம்பந்தமான தொழில்நுட்ப பீடத்தின் தலைவா் கலாநிதி  பி.ஜி.என்  செவ்வந்தி,  தகவல் தொழில்நுட்பம்  பட்டத்திற்கான எஸ்.எல். அப்துல் ஹலீம் ஆகியோறும்  

தென்கிழக்கு பல்கலைககத்தில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட  இப் பயிற்சி நெறிகள் பற்றியும் விளக்கங்களை அழித்தனா்.

இப் பயிற்சி நெறிகள் கைத்தொழிற்சாலைகள். பேட்டைகள்  விவசாயம்,    கனணி தொழில்நுட்பம்,  போன்ற பல்வேறு தொழில்நுடபத்துறை சாா்ந்த பட்டப்படிப்பினை முடித்தவா்களுக்கு  செய்முறைப் பயிற்சி  தொழில்வாய்ப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog