Breaking

Tuesday

நடுநிலை தவறிய ஊடகங்களின் நாணயமற்ற செயல்.....!அதிபர்.


தற்போது நாடு பூறாவும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை தொடர்பில் எவ்விதமான ஆதாரங்களுமற்ற முறையில் மாணவர்களின் பெறுபேறுகளை மலினப்படுத்தும் வகையில் சில ஊடகங்கள் பரத்தைத் தனமானவர்களின் வேண்டுதல்களை தலைப்புச் செய்தியாகப் போட்டு தங்களைப் பிரபல்யப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. 

இதற்காதாரமாக அண்மையில் சம்மாந்துறையில் பிரபல பாடசாலையில் புளுடூத்தில் பரீட்சை மோசடி செய்ததாகவும் மோசடியில் ஈடுபட்ட முஸ்லிம் பெண் பரீட்சார்த்தி பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் ஆதாரமற்ற செய்தியைப் பிரசுரித்து ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தைக் குழப்பும் வேலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

ஒரு ஊடகத்தில் செய்திகளைப் பிரசுரிக்கும் போது அடிப்படை ஆதாரங்களைப் பெற்றுக் கொள்வது சம்மந்தப்பட்டவர்களின் தார்மீகக் கடமையாகும். இந்த ஊடக தர்மத்தை என்னவென்று அறிந்திராத கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் அவ்வூடகங்களை உடனடியாக முடக்கவும் வேண்டும். 

பரீட்சை நடைபெறும் காலங்களில் இவ்வாறான வதந்திகளை பரப்புவோர்களையிட்டு மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் சமூகப்பொறுப்போடு நடந்து கொள்ளுமாறும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம். 

பல்வேறு சுமைகளையும், வேதனைகளையும் அனுபவித்து பரீட்சையில் ஈடுபடும் மாணவர்களையும் பரீட்சைக் கடமையில் இருக்கும் அதிகாரிகளையும் சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஊடகங்களை சட்டத்தின் முன் கொண்டுவர சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒன்று படுவோம். 

ஆதாரமற்ற செய்திகளினூடாக இனவாதத்தைத் தூண்டி நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ண சில தீய சக்திகள் சர்வதேச நயவஞ்சகக் கூட்டத்துடன் கைகோர்த்துள்ளன. 

குறிப்பாக முஸ்லிம் மாணவியரின் பர்தாக்கள் களையப்பட்டு அவர்களை உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதையிட்டும் எமது கண்டனத்தை வன்மையாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய கலாசாரத்தின் மீது சேறு பூசுகின்ற சூத்திரதாரிகளை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைவரும் ஒன்று படுவோம். 

இங்ஙனம்,

அதிபர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog