Breaking

Monday

சம்மாந்துறையின் கல்வி வளர்ச்சி மீது காழ்ப்புணர்வுடன் செயற்பட்டுவரும் சில நபர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் சில வதந்திகள். !


அண்மையில் சில இணையத்தளங்களில் சம்மாந்துறையில் மாணவி ஒருவர் பரீட்சை மண்டபத்தில் விதிமுறைகளை மீறி பரீட்சை எழுதியதும் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த மாணவியினைப் போலீசில் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்ட மாணவியினை பரீட்சை எழுத்துவதிலிருந்தும் இடை நிறுத்தியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் குறிப்பிட்ட இந்தச் செய்தியினை சம்மாந்துறைப் போலீசாரும் வலையாக கல்விப் பணிமனையும் மறுத்திருக்கின்றது.
இதிலிருந்து இந்தச் செய்தியானது அபாண்டமானது என தெரிய வருகிறது.
மிகவும் அண்மைக்காலமாக சம்மாந்துறையின் கல்வி வளர்ச்சி மீது காழ்ப்புணர்வுடன் செயற்பட்டுவரும் குறிப்பிட்ட சில நபர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் சில வதந்திகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
அதன் எதிரொலியாகவே குறிப்பிட்ட இந்தச் செய்தியானது பரீட்சை நடை பெறும் இக்காலப் பகுதியில் திட்டமிட்டு பரப்பப் படுகின்றது.
இதன் மூலம் பரீட்சை நடவடிக்கைகளில் நெருக்கடிகளையும் வீண் தலையீடுகளையும் உருவாக்குவதே சில ' முக்தி ' யடைந்த மனிதர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
குறிப்பிட்ட இணையத்தளச் செய்தியின் இறுதியில் கடந்த முறை மருத்துவ பீடங்களுக்கு சம்மாந்துறையில் இருந்து தெரிவாகிய மாணவர்களின் பெறுபேறுகளை இணைத்துக் காட்டியுள்ளமையானது அவதானிக்கத் தக்கது.
அன்புள்ள மாணவர்களுக்கு...!
இம்முறையும் நீங்கள் அதிகமான பெறு பேறுகள் பெற்று இப்படியான மனிதர்களுக்கு தகுந்த பாடத்தைப் படிப்பிக்க அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக...!
by-
Ranoos Muhammath Ismail
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog