Breaking

Friday

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு.... 5ல் இருந்து 12 க்கு


(அஷ்ரப்   ஏ சமத்)

கடந்த மூன்று நாட்களாக தலைக்கு மேல் பாரமாக நின்றது மேற்படி தலைப்பு. இப்போதுதான் நே ற்று(23)  இரவு 10 மணிக்கு ஓரளவு சுமை இறக்கியது.   இதில் மேலும் நாம் காய் நகா்த்தி எமது மலையக மக்களுக்கான   உரிமைகளை வென்டெடுக்க  வேண்டும்.

எமது  முற்போக்கு     முன்னணி  தலைவா் மனோ கனேசன்,  அமைச்சா் திகாம்பரம், இராஜாங்க அமைச்சா் இராதாக் கிருஸ்னன்   மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள் சோ்ந்து   ஓராண்டு காலத்திற்குள் நான் முன்வைத்த ஐந்து ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளில் இரண்டு அதி முக்கியமானவை.  என  நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினா்  திலகா் கருத்து தெரிவித்தாா்.

அவா் அங்கு மேலும் தகவல் தருகையில்  நுவரேலியா பிரதேச சபைகள் பற்றி  நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா்கள்  முத்து சிவலிங்கம் மற்றும் ஜ.தே.கட்சி  பா.உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.   இந் நிகழ்வு அமைச்சா் பைசா் முஸ்தபாவின் அமைச்சில் நடைபெற்றது.

1. 1987 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தை திருத்துதல்
2. நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களை அதிகரிக்கப்டல் வேண்டுமென  நேற்று
இந்த இரண்டும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களோடு சம்பந்தப்பட்டவை.

இரண்டுமே கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அதன் செயற்பாடுகளை அவதானித்து வந்த நாட்களாக இரண்டாம் ஆண்டு கழிந்துகொண்டிருக்க,
பிரதேச சபைகள் சட்டத்திருத்தம் கடந்த வாரம் நகலாக கைகளுக்கு கிட்டியது. சட்ட வரைஞர் திணைக்களத்தினால் திருத்தம் செய்யப்பட்டுஅனுப்பபப்ட்டுள்ள வரைபில் சில சொற்பதங்கள் திருத்தம் செய்யவேண்டியுள்ளது. அதற்கு துறைசார் அமைச்சரின் உடன்பாடு கிடைத்திருக்கிறது.

பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டால் பிரதேச சபைகள் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நெருங்கியமை காரணமாக பிரதேச சபைகளை அதிகரிப்பது தொடர்பான அழுத்தத்தை அதிகம் கொடுக்க வேண்டியதாகவிருந்தது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் முறை தொடர்பில் கட்சிதலைவர்களுடனான சந்திப்புக்களின்போது எமது கூட்டணி தலைவர் மனோ கணேசனும் எமது கட்சியின் தலைவர் திகாம்பரத்தினதும் அழுத்தம் பிரதேச சபைகளை அதிகரிப்பது தொடர்பாக இருந்து வந்தது. அதன்போதெல்லாம் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிப்பதற்கு உடன்பாடு தெரிவித்திருந்தார்.

அவ்வப்பபோது தலைவரை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டங்களுக்கு சமூகமளித்த போது என்னைச் சுட்டிக்காட்டியும் இவர்களது கோரிக்கையை நாம் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்..

எனினும் கடந்த மூன்று நாளைக்கு முன்பதாக இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல்கள் முடிந்த பின்னரே பிரதேச சபைகளை அதிகரிக்க முடியும் என பிரதமர் தெரிவிக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எமது கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் விடயத்தின் முக்கியத்துவதை;தை உணர்த்தியது.

அதேநேரம் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த எமது கட்சியின் தலைவர் திகாம்பரம் தொடர்ந்து அமரந்திருந்து ஆறுதலாக எமது கூட்டணி தலைவரின் வெளியேற்றத்திற்கான காரணத்தை எடுத்துக்கூறி நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியான பிரதேச சபை அதிகரிப்பை தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் சாதகமான முடிவை எடுக்க காய் நகர்த்தியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் நேற்று மாலை விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி இன்று காலை தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு துறைக்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து எமது கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை சமர்ப்பித்தோம்.

கொள்கையளவில் எமது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் இன்று இரவு 9.30 மணிக்கு தனது அமைச்சில் சந்தித்து இன்னும் விரிவாக பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அதற்கு முன்பதாக காலையில் கொள்கையளவில் உடன்பட்ட விடயம் தொடர்ப்pல் மாலை நாடாளுமன்ற குழு அறையில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி விளக்கம் அளித்திருந்தோம்.

அதன் பிரகாரம் இப்போது அமைச்சருடன் நடந்த பேச்சுவாரத்தையில் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்து பிரதேச சபைகளாக இருக்கும் அம்பகமுவை, நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்தை ஆகிய பிரதேச சபைகளை பன்னிரண்டாக உயர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

 இதன்படி அம்பகமுவை மூன்றாகவும், நுவரெலியா மூன்றாகவும் பிரிக்கப்டுவதோடு ஏனைய மூன்று பிரதேச சபைகளும் இவ்விரண்டாக பிரிக்கப்படல் வேண்டும் என்பது எமது கோரிக்கை. பிரதேச செயலகங்கள் 12 ஆக உயரத்தப்படல் வேண்டும் எனும் எமது பிரேரணையில் கோரியதன் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையையும் முன்வைத்தோம்.

இது தொடர்பாக காலையில் கொடுக்கப்ட்ட ஆவணத்துக்கு மேலதிகமாக சுருக்கமான வரைபு ஒன்று வட்டார அடிப்படைகளையும் சேர்த்து கையளித்தோம். காலையில் அமைச்சர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதால் இதனை தயாரிப்பதில் இன்றைய மாலைப்பொழுதை நாடாளுமன்ற நூலகத்திற்குள் அதிகம் செலவிட்டிருந்தேன்.

தமிழ் முற்போற்போக்கு கூட்டணியுடன் நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச வும் ஊடக சந்திப்பிலும் இரவு அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

மலையக கட்சிகள் அனைத்தும் 5 பிரதேச சபைகளை 12 பிரதேச சபைகளாக அதிகரிப்பதற்கு உடன்பாடு கண்டுள்ளன. இந்த வாரம் அமைச்சரவைக்கு குறித்த பிரேரணையை தான் முன்வைத்து எமது கோரிக்கையைநிறைவேற்றுவதாக அமைச்சர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.

நேற்று  மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியில் இரவு பதினொறு மணிக்கு சாதகமான எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் முடிகிறது. இடையே ஜனாதிபதியுடனான கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்ள நேர்ந்தது.
 உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான சட்டம் பற்றிய விவாதம். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மேலதிக பகுதியாக
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog