Breaking

Tuesday

இன்று ஆரம்பமாகும் உ.த.பரீட்சையில் மாணவர்மட்டுமல்ல நோக்குனர்கூட செல்போன் பயன்படுத்தத்தடை!


காரைதீவு நிருபர் சகா

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப்பரிட்சை இன்று (8) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில்  எந்தவொரு பரீட்சார்த்தியாவது ஸ்மார்ட் போன் கைத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் போன்றவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் எடுத்து வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறானவர்களுக்கு 5 வருட காலத்துக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் பரீட்சை கடமையிலீடுபடும் நோக்குனர்கூட செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரதான நோக்குனர் செல்போனை அமைதியில்(ளடைநவெ) இட்டிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. விசேட தேவையுள்ளவர்கள் 260 பேர் உட்பட இம்முறை பரீட்சைக்கு மூன்று லட்சத்து 15227 பேர் தோற்றுகின்றனர். இப்பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை சரியாக காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதனால்இ பரீட்சார்த்திகள் காலை 8.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை அனுமதி அட்டை ஆள் அடையாள அட்டை என்பவற்றை பரீட்சார்த்திகள் கட்டாயம் எடுத்துவர வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog