Breaking

Tuesday

பறிபோனது கபுகெதரவின் தலைவர் பதவி....காரணம்


இலங்கை கிரிக்கெட் சபை சாமர கபுகெதர உபாதை காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் கடந்த போட்டியில் நாணய சுழற்சியின் பின்னர் தவறான தீர்மானத்தை எடுத்த காரணத்தினால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியை பொருத்தவரையில் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்திருந்தது. முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தோல்வியடைந்தது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணிக்குழாம் தீர்மானித்திருந்தது. எனினும் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பின்னர் சாமர கபுகெதர தவறுதலாக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதில் மைதானத்தின் உடைமாற்றும் அரையில் இருந்த வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள் சற்று குழப்பமடைந்துள்ளனர். பின்னர் அறைக்கு திரும்பிய கபுகெதர தவறுதலாக அறிவித்ததாக அணி முகாமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கபுகெதரவை அணியிலிருந்து நீக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபை அடுத்த போட்டிக்கான அணித்தலைவரை நியமிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog