Breaking

Monday

தனியான சாய்ந்தமருது பிரதேச சபை இன்று பிரகடனம் ! 28-08-2017


முஸ்லிம் அரசியல் ஒரு காலகட்டத்தில் பேரினவாதத்தின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு  ஒருவகையான அடிமைத்தனமாக தேவைகளுக்கு ஏற்ப சில சலுகைகளை பெற்றுக்கொண்டு  மக்களை எதுவும் சிந்தித்து செயற்பட விடாமலும் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமை சார்ந்த விடயங்களில் பாகுபாடு காட்டியும் பேரினவாதத்தின் பிடிக்குள் இருந்த காலகட்டத்தில்தான்
முஸ்லிம் அரசியல் ஒரு மாற்றத்தை வேண்டி நின்றது

அதன் எதிரொலியாகத்தான் முஸ்லிம் தனித்துவ அரசியல் உரிமை அபிலாசை தனியான அதிகாரங்கள் என்ற பல வகையான கோஷங்களை முன்வைத்து தனித்துவ அரசியல் பாரிய வளர்சியை கண்டது.

அதன் கோஷமும் வளர்சியும் காலப்போக்கில் தனித்துவ அரசியல் உரிமை அபிலாசை என்ற கொள்கை கோட்பாட்டை சமூக நலனில் இருந்து அதை மறந்து தேர்தல் காலங்களுக்காக மாத்திரம் மக்களை உணர்வூட்டி தங்களுடைய அரசியல் பதவி அதிகாரங்களை பெறுவதற்கான கோஷமாக முஸ்லிம் அரசியல் பேரினவாதத்திற்குள் அடங்கிப்போய் அபிபிருத்தி அரசியல் என்ற மாயயை மக்களுக்கு காட்டி தங்களுடைய சுய நல அரசியலை வளர்த்துக் கொண்டதன் விளைவுதான்

இன்று நம் சமூகத்தின் அரசியல்ரீதியான  உரிமையும் வாழ்வதார மறுப்புகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில்தான் தற்போது மறுக்கப்பட்ட உரிமையாகவே சாய்ந்தமருது பிரதேச சபைக்கான முன்னெடுப்புகளும் அதனால் ஏற்பட்ட சாதக பாதகங்களையும் இப்போது கண்டுவருகின்றோம்.

அன்று மறைந்த தலைவர் அஷ்ரப் காலம் தொடக்கம் இன்று வரையும் அரசியல் அதிகார பதவிற்காக சாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபைக்கான உரிமைப்போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னெவன்றால் உரிமைகளை பெற்றுத்தருவோம் என்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் எல்லாம் தங்களது பங்களிப்பை எவ்வாறு செய்திருக்கின்றார்கள் என்று சற்று மீட்டுப்பார்த்தால் அவர்களின் அரசியல் சுயநலமும் மக்கள் மீதுள்ள பற்றும் தெளிவாக புரிந்து கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

முஸ்லிம்களின் உரிமை அரசியலின் தந்தையான மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களும் ஆரம்பத்தில் உரிமை அரசியலையும் அவைகள் எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தூரநோக்கு அடையாளப்படுத்தப்பட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபைக்கான முக்கியத்துவத்தை அவசியப்படுத்தாமையாலும் அப்படி ஒரு தேவை உணரப்பட்டாலும்

அதற்கான அதிகாரங்கள் இருந்தும் அபிபிருத்தி மற்றும் ஏனைய தேவைகளை முதன்மைப்படுத்தியதாலும் தனியான பிரதேச சபை ஏற்படுத்தப்பட்டால் பல அரசியல் ரீதியான விளைவுகளும் பிரதேச ரீதியான ஒற்றுமை இன்மைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழியமைத்து கட்சியின் கோட்டைக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு

இந்த விடயத்தில் இந்நிலைப்பாட்டில் செயற்பட்டாலும் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை என்கின்ற எண்ணமும் அவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவரின் செயற்பாட்டில் இருந்துள்ளது, என்பதற்கு நிறையவே வரலாற்று சம்பவங்களும் நிகழ்வுகளும் துணையாக இருக்கின்றது ஆனாலும்

அவரும் இறுதி நேரங்களில் அபிபிருத்தி என்கின்ற மாய அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உரிமைக்கு கொடுத்து இருந்தால் இன்றும் முஸ்லிம்களின் உரிமை அரசியல் உயிரோட்டமாகத்தான்  இன்றுவரையும் இருந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உரிமை அரசியலில் இருந்து அபிபிருத்தி அரசியலில்தான் முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்த முடியும் என்ற சிந்தனையை ஏற்படுத்தி  பேரினவாத அரசியல் கட்சியில் ஒட்டி உறவாடுவதன் ஊடாகத்தான் முஸ்லிம்களின் உரிமையை வென்றெடுக்கலாம் என்ற மாயயையும் ஏற்படுத்தி அரசியல் அதிகார பதவிக்காக மீண்டும் தூசி தட்டப்பட்டது சாய்ந்தமருது பிரதேசசபை

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களால் உள்ளுராட்சி நிர்வாகங்களுக்கு பொறுப்பான அமைச்சுப்பதவியில் இருந்த காலத்தில்தான் அவரும் சாய்ந்தமருது பிரதேசசபை விடயத்தை சமூக நலனுடனும் இதய சுத்தியுடனும் அந்த பிரதேச நன்மை கருதியும் முழு மனதுடன் செயற்பட்டு இருந்தால் அன்றைய மகிந்த அரசின் முழு அதிகாரமும் மகிந்தவிடம் இருந்ததால் சில நேரங்களில் செய்து இருக்கலாம்

ஆனால் அவரும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் சில நிர்வாக முன்னெடுப்புகளையும் செய்து விட்டு பல அரசியல் காரணக்களுக்காகவும் அற்ப சொற்ப அரசியல்  விடயங்களுக்ககாவும் ஒருவரை ஒருவர் இன்று வரையும் குற்றம்சாட்டி கொண்டு சாய்ந்தமருது மக்களின் மீது உள்ள நலனிலும் உரிமை அரசியலிலும் இருந்த அக்கறையின் வெளிப்பாடாகவே அதனை வெளிக்காட்டி அவரின் அபிவிருத்தி அரசியலையே தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் போராளிகள் இருந்தும் புதிய முகமும்  அரசியலில் பெரிதாக அனுபவமில்லாத ஒருவரை  களமிறக்கி இரன்டு பிரதேசங்களுக்கு ஒப்பந்த அடிப்ப்படையில் சாய்ந்தமருது மக்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக அடிக்கடி தனித்துவக்கட்சியின் ( SLMC ) தலைவர் கூறும் வார்த்தைதான்

 “சாய்ந்தமருது மக்கள் தான் என்னை முதுகில் சுமந்து கொண்டுவந்து  தலைமை என்ற கீரிடத்தை எனக்கு அணிவித்தவர்கள்” என்ற மந்திர வார்த்தையை அர்த்தப்படுத்துவதற்கும் கட்யின் கோட்டையாகிய கல்முனை மாநகரத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் சாய்ந்தமருது மக்கள் எப்போதுமே தன்கட்சி ஆதரவளார்கள் என்பதை காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட ஒருவராகவே அன்று சகோதரர் சிராஸ் அவர்கள் அடையாளம்காணப்பட்டு தேர்தலில் களமிறக்கப்பட்டார்.

(அதில் சுவாரசியம் என்னவென்றால் அவரின் வருகையை கட்சிக்குள் அன்றும் எதிர்க்கத் தொடங்கியவர்கள் அவர் பதவியில் இருந்த காலம் முதல் இன்று வரையும் அவரை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் இதற்கு பின்னால் பெரிய கபடத்தனம் உள்ளது அதை இவ்விடத்தில் குறிப்பிடப்பட வேண்டியதில்லை)

சகோதரர் சிறாஸ் அவர்களும் கட்சியால் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவும் தேர்தல் வெற்றியாலும் அவர் வெற்றிவாகை சூடினார் பல இழுபறிக்கு மத்தியில் அவருக்கான பதவி வழங்கப்பட்டது.

அவரும் பதவியில் இருந்த காலங்களில் எல்லாம் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதில் இருந்த அக்கறை தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகள் எதிர்கால திட்டங்கள் பிரதேசத்தின் தேவைகள் எதுவும் கண்ணுக்கு புலப்படாமல் பதவியில் மிதந்துக்கொண்டிருந்த வேளையில் அந்த பதவி தன்னை விட்டு கைமாறி விட்டது என்ற பின்புதான் தன்னுடைய பிரதேசத்திற்கான அடிப்படை தேவை என்ற தனியான பிரதேச சபை கோஷத்தை கையில் எடுத்தார்.

அவர் பதவியில் இருந்த காலத்தில் கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் தலைமைகளுடன் நெருங்கிய உறவுகளிலும் இருந்த போதெல்லாம் ஏற்படாத சமூகப் பொறுப்பு பதவியை விட்டு இறங்கியவுடன் கட்சியை விட்டு பிரிந்த பின்புதான் தனியான பிரதேச சபை என்ற விடயத்தை வெளிப்படையாக பேசத் தொடங்கியது மட்டுமில்லாது

அந்த கோஷத்தை தன்சுயநலத்திற்காக கட்சிளை விட்டு மாறுவதற்கான ஒரு சந்தர்ப்பவாத துரும்பகவே பாவித்தாரே தவிர தன்னுடைய மக்களின் நலனுக்காகவும் எதிர்கால பிரதேச நன்மைக்கான இதய சுத்தியுடனும் அர்பணிப்புடனும் செயற்படவில்லை என்ற விடயத்தையும் நாம் மீட்டிப்பார்க்க வேண்டும்.

சகோதரர் ஜெமீல் அவர்கள் தன்னுடைய பிரதேசத்திற்கான பிரதேச சபை கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்வெளிப்படையாக  செயற்பட்டாலும் அவரின் உளத்தூய்மையான செயற்பாடாக அதை காண முடியவில்லை அவரின் அரசியல் இருப்பையே பிரதனமானதாகவும் மக்களுக்கு ஒரு முகத்தையும் தன்னுடைய அரசியல் தலைவனுக்கு ஒரு முகத்தையும் காட்டுவதையும்

அவ்வப்போது அறிக்கைகள் விடுவதையும் ஏனைய அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் ஏதாவது முன்னடுப்புக்களை செய்வதை அறிந்தால் அதற்கு எதிராக அறிக்கை, கன்னடனம், உரிமை கோரல், என அவருடைய வழமையான சுய நல பதவி மோக அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இருப்பதை காணலாம் கடந்த மேயர் பதவி விடயத்தில் சிறாஸ் அவர்களுக்கு அந்த பதவி வழங்கப்படக்கூடாது என்பதற்காக ஜெமீல் நடத்திய நாடகம் அதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன என்பதை எல்லாம் மறந்து

தொடர்ந்தும் தன்னுடைய சுய நல அரசியலுக்காக சாய்ந்தமருது மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார். ஏன் கடைசியாக ஒட்டப்பட்ட அநமேதய சுவரெட்டிகளில் கூட அவருடைய பங்களிப்பு இருப்பதாக சமூக தளங்களில் பேசப்பட்டுக்கொண்டிருகின்றது

எனவே அவரும் இந்த விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பாடாமல் அவரின் அரசியல் இருப்புக்கான ஒரு கோஷமாகவே தனது பிரதேசத்திற்கான தனியான பிரதேசசபை இருக்கின்றது.

மக்கள் மன்றிலும் பத்திரிகையிலும் பொது மேடைகளிலும் வீராப்பு பேசுவதும் அறிக்கைகளை விடுவதுமாக நமது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருப்பதும் குறிப்பாக இந்த விடயங்களில் உள்ளூர் பிரதேச அரசியல் வாதிகள் போராளிகளின் நியாயமற்ற சுயநல  அழுத்தங்களினாலும் ஏனைய தடங்கல்களுக்கும் தனித்துவ கட்சியின் (SLMC) தலைமை ஒரு போதும் செயற்படக்கூடாது மக்களின் நலனின் மிகவும் பொறுப்புடன் செயட்படவேண்டுமே தவிர

தங்களுடைய குறுகிய அரசியல் போக்குள்ளவர்களின் சுயநலத்திற்காக செயற்படுவதால் மக்கள் தனித்துவ அரசியல் கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை இழப்பது மட்டுமில்லாது ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சியின் தலைமைத்துவத்திற்கான முறையுமல்ல

என்பதையும் மக்களின் சமூக நலன் சார்ந்த விடயங்களில் எவ்வாறு நடந்த கொள்ளவது ஒரு சமூக பொறுப்புள்ள கட்சியின் கடமை என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேபோல் ACMC கட்சியின் தலைமையும் அவர்களின் உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நேரடியாக மக்களின் பிரச்சனைக்கு இதயசுத்தியுடன் பிரச்சனைகளின் உண்மையான தாற்பரியத்தை நீதி நேர்மையாக உணராமல் தற்போது கிடைத்து இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை தங்களுடைய கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக

சாய்ந்தமருது பிரதேச சபைக் கோஷத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு பள்ளி வாயல்கள் நிர்வாகத்தையும் ஊர் பிரமுகவர்களையும்  ஏனையவர்களையும் ஏமாற்றும் ஒரு வகையான நாடகத்தை உள்ளூர் அரசியல்வாதிகளும் அதுபோல் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இன்று பல இடங்களிலும் மக்கள் காங்கிரஸின் தலைமை பேசத் தொடாங்கி இருப்பது என்பது

இது மக்களுக்கான பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுகளை வேண்டியதல்ல அது அவருடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கான ஒரு வழியே தவிர ஒருபோதும் மக்களின் பிரச்சனைக்கான தீர்வாக அமையாது என்பதை தலைமைகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தலைமைகள் ஒரு போதும்  தங்களுடைய உள்ளூர் அரசியல் சாகக்களிடமிருந்து வரும் தகவல்களையும் விபரங்களையும் வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்மானிக்காமல்

இது அரசியலுக்கு அப்பால் ஒரு சமூகத்தின் உரிமை சார்ந்த விடயம் என்ற பரந்த நோக்கிலும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர தீர்வும் என்ற தூரநோக்கு அடிப்படையில் பார்க்க வேண்டும்

தங்களுடைய அற்ப சொற்ப அரசியல் இலாபங்களுக்கு அடங்கி விடாமல் தூரநோக்குடனும் நேர்மையான இதய சுத்தியுடனும் சிந்தித்து மக்களின் விடயத்தில் செயற்பட வேண்டும். ஒற்றுமையை பற்றி ஒவ்வொரு மேடைகளிலும் பேசுவதை மட்டுமே கொள்கையாக கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்த யாரும் முன்னின்றதாக காணவில்லை நாம் தமிழ் மக்களின் அரசியலை பற்றி அடிக்கடி பேசிக்கொள்கிறோம் அவர்களுக்கு இடையில் எத்தனை கட்சிகள் பிரிவுகள் இயக்கங்கள் இருந்தாலும் உரிமை என்ற விடயத்தில் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம் இருக்கும் அதே கருத்துதான் சாதாரண பொதுமகனிடமும் இருக்கின்றது..

இந்த முன்மாதிரிகள் நமது சமூக அரசியலில் இருக்க வேண்டும் கட்சிகள் தலைமைகள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சமூகம் என்ற விடயத்தில் பொது நிலைப்பாடுகள் இருப்பதால் மட்டுமே எமக்கான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும் என்பதை அரசியல் தலைவர்கள் அவர்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரதிநிதிகள் என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளின் தொடரான இழுபறிகளாலும் சுயநல அரசியல் சிந்தனையாலும் பதவியின் மீது கொண்ட ஆசையினாலும் எதுவும் மக்களுக்கான தீர்வாக கிடைக்காது என்பதை உணர்ந்தும் ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான கோரிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள், பொது நிறுவனங்கள், ஏனைய சமூக ஆர்வலர்கள், என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்திருக்கின்றார்கள்

அதன் ஆரம்ப கட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தும் இருக்கின்றார்கள் இது வரவேற்கப்பட வேண்டிய ஆரோக்கியமான விடயமாகும். ஆனாலும் பள்ளி நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டிய இத் தருணத்தில்

அமைச்சர் ரிசாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவும் உள்ளூர் அரசியல்வாதியின்  உண்மையை மூடி மறைத்து மக்களுக்கு பிழையான தகவல்களை கொடுப்பது பொறுப்பு வாய்ந்த பள்ளிவாயல்களின் நிறுவகங்களின்  கடமையாக இருக்கக்கூடாது. ( Public Opinion )

பொது விடயங்கள் என்று வரும் போது அரசியலுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு செயற்படுவதன் ஊடாகத்தான் நமது பிரதேசத்திற்கான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும் அதை விடுத்து ஒரு அரசியல் வாதியின் பிழையான அறிக்கையான சாய்ந்தமருதுக்கான தீர்வு எதிர்வரும் 28/08/207 இன்று  அறிவிக்கப்படும் என்ற பொய்யான தகவலை வழங்கியதை கேட்டுக்கொண்டு

அதை எந்த பரிசிளனையும் செய்யாமல் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி மக்களை ஏமாற்றுவதன் ஊடாக மக்களும் பள்ளிவாயல்கள் நிர்வாகத்தில் நம்பிக்கை இழந்தது மட்டுமின்றி ஒரு பக்ச்சார்பானவர்கள் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வார்கள்.

இந்த அனுகுமுறை மக்களை இன்னும் தூரப்படுத்தும். எமது மக்களால் அதிகம் நேசிக்கப்படும் தலைமைகளாக பள்ளி நிர்வாகங்களும் இருக்கின்றது என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அற்ப அரசியலுக்காக அல்லாஹ்வின் மீதும் மார்க்கத்தின் மீதும் பொய்களை உரைப்பவர்களுக்கும் அராஜக அடாவடிகளுக்கும் ஒரு போதும் துணைபோகக்கூடாது.

பள்ளி நிர்வாகங்கள் எப்போதும் நீதிக்கும் நேர்மைக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதன் ஊடாகத்தான் மக்களின் மதிப்பையும் ஆதரவினையும் பெற முடியும்.

28/08/207 இன்று சாய்ந்தமருது பிரதேச சபைக்கான தீர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் பல வகையான கருத்துக்களும் சமூக தளங்களிலும் இணையங்களிலும் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருப்பதால் மக்கள் அது தொடர்பாக விழிர்ப்படைந்து இருக்கின்றார்கள் என்பதை விட

அதில் பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் கருத்துக்கள் நியாயமானதாகவும் நீதியானதாகவும் மற்றவர்களின் கருத்துக்களை மதிக்கின்ற முறையிலும் நடந்து கொள்ள வேண்டும் அதற்கு மாற்றமாக நாம் பிரதேச வாதத்தையும் ஊர்வாதத்தையும்

ஏனைய பல வகையான பிரச்சனைகளையும் ஏற்பட வழிவகைகளை அமைக்காமல் எமது மக்களின் பிரச்சனைக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அந்த மக்கள் எதிர்காலத்தில் பல நன்மைகள் அடைந்து கொள்ள வேண்டும் என்கின்ற

பரந்த உளதூய்மை எமக்கு இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக தேவையற்ற வீண் விவாதம் பிரதேசவாத ஊர்வாத பகைகளை தூண்டும் கருத்துப் பரிமாறல்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் ஒவ்வொரும் இதயசுத்தியுடனும் நேர்மையாகவும் உண்மைக்கு உண்மயாகவும் எல்லாவற்றிக்கும் மேலாக அல்லாஹ்வுக்கும் பயந்தும் செயற்பட வேண்டும்.
    
உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பது நீதியாகவும் நியாயமாகவும் இதயசுத்தியுடனும் நடத்தப்பட வேண்டும் ஒரு பிரதேசத்திற்கான தீர்வாக மட்டும் அமையாமல் அதை சுற்றிய நான்கு பிரதேசங்களுக்குமான தீர்வாகவும் பிரதேச ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும்

கட்சி அரசியல் இயக்கம் பிரதேசம் ஊர் என்பதற்கு அப்பால் எல்லேரும் சகோதரர்கள் என்ற சகோதர வஞ்சனையுடன் ஒற்றுமையுடனும் தான் வெற்றிகளை காணமுடியும். தற்போது இந்த தீர்வு விடயம் பல சிக்கல்களை சர்ச்சைகளுக்கு ஏற்படுத்தியது மட்டுமில்லாது இந்த அரசாங்கத்தின் புதிய தேர்தல் சட்டத்திருத்தங்கள் மூலம் இன்னும் விடயத்தை கடினமாக்கி விட்டார்கள்.

ஆகையால் அரசியல் வாதிகள் தற்போது சட்டங்களை காரணம் காட்டி மக்களிடமிருந்து தப்பிப்பதற்கான வழியை தேட தொடங்குவார்கள்.

ஆகவே மக்களாகிய நாம் எமது உரிமைப் போராட்டத்தை ஜனநாயக முறையில் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம் அரசியல் வேறுபாடுகள் மார்க்க ரீதியான கருத்துவேறுபாடுகள், பிரதேச ஊர் வேறுபாடுகள், என அனைத்தையும் மறந்து

நமது சமூகம் நமது உடன்பிறப்புகள் நமது மண் என்ற ஒற்றுமையுடன் தொடரான அழுத்தங்களை அரசுக்கு கொடுப்பதன் ஊடாகத்தான் அரசின் நேரடி கண்காணிப்பில் இந்த விடயங்களை வெற்றி கொள்ள முடியும்

எப்படி முஸ்லிம் அரசியல் தனியான மாகாணம் என்றும் தென்கிழக்கு என்றும் நிலத்தொடர்பு அற்ற மாகாணம் என்றும்  நிர்வாக அலகு என்றும் மலுக்கடிக்கப்பட்டு கடைசியில் கரையோர மாவட்டம் என்று சுருக்கிக் கொண்டு தற்போது பாதுகாப்பாக பொட்டியில் வைத்து மூடப்பட்டு அடுத்த தேர்தலுக்காக தூசி தட்டப்பட உள்ளதோ அது போல்தான்

சாய்ந்தமருது மக்களின் தனியான சபைக் கோஷமும் அடுத்த தேர்தலுக்காக பொட்டியில் அடைக்கப்படும் அதற்கு முன் மக்களாகிய நாம் பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்பட்டு நம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மக்கள் சக்தியை ஒன்றிணைப்போம்.

மக்களின் பலம் என்ன என்பதை சாணக்கிய காங்கிரஸ், சத்திய காங்கிரஸ், அதா காங்கிரஸ், சிறாஸ், ஜெமீல், ஹரிஸ் ( அமைச்சர் ஹரீசுக்கு எதிராக வைக்கப்படும் தொடர்  விமர்சனங்களை மறுப்பதற்கில்லை )
என அனைத்து அரசியல் வியாபாரிகளுக்கும் காட்டுவோம்


அதையும் மீறி இவர்களின் அரசியல் அதிகார பதவி அராஜகத்தால் மக்கள் சக்தியையும் சாய்ந்தமருது மக்களின் உரிமையையும் கட்டுப்படுத்துவார்கள் என்றால் இவர்களின் அரசியலை மக்கள் சில நேரங்களில் மன்னித்தாலும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் இட்டுச் சொல்லும் வரலாறு ஒருபோதும் இவர்களை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டாது..

என்பது நிதர்சனமான உண்மையாகும்..



“அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியத்தின் வழியில் நிலை நிறுத்துவனாக.!! ஆமீன்!!”      

BY: Mohamed Ansar / Naspf Lanka             
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog