Breaking

Monday

கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பையினால் தனிநபர் பிரேணை சமர்ப்பிப்பு.......


(எம்.ஜே.எம்.சஜீத்)

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போதுகிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஒரு தனிநபர்பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன். கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து சிலகேள்விகளும் முன்வைக்கப்படவுள்ளது.

2017ஆம் வருடத்தில் கிழக்கு மாகாண சபை ஊடாகவும், அமைச்சுக்கள் ஊடாகவும் கிழக்குமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 23,578,942.00 மில்லியன் என இந்த வருட வரவு –செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது. இம் மதிப்பீட்டுத் தொகையில் இந்தவருடத்தின் அரையாண்டும் கடந்து சென்ற நிலையில் நிதிகள் இதுவரையும்கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையின்அபிவிருத்திப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகுவதால் கிழக்கு மாகாணம் பலபின்னடைவுகளை சந்திக்கும் நிலைமை உருவாகி வருகின்றன. 

இந்த வருடத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரை கிழக்கு மாகாண சபைக்குமத்திய அரசால் வழக்கப்பட்டுள்ள நிதியின் விபரங்களையும்;, நடப்பாண்டுக்கான கிழக்குமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மீதியாக மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட உள்ளநிதியினை அவசரமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள மிகுதி நிதியினை அவசரமாக வழங்குமாறுகோரும் ஒரு தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை கிழக்கு மாகாண சபை அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர்உதுமாலெப்பை கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து பின்வரும் கேள்விகள்கேட்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் சித்திரம், உடற்கல்வி, 2ம் மொழி(சிங்களம்) தமிழ்,உளவளத்துறை ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் எத்தனைபேர்உள்ளனர் என்ற விபரங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சபைக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்குறித்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில்எத்தனை வருடங்களாக நிரப்பபடாமல் உள்ளது என்பதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்சபைக்கு தெரிவிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மேற்குறித்த பாட வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்களைநியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் பல வருடங்களாக கற்பிக்கும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை மாகாணப் பணிப்பாளரின் புதிய சுற்று நிருபத்தின் படி ஆரம்பக் கல்விவகுப்புகளுக்கு இடமாற்றப்படுவதனால் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஏற்படக் கூடியபாதிப்புகள் குறித்த விபரங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சபைக்கு தெரிவிக்கவேண்டும்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர்களாகவும், பிரதி/உதவி அதிபர்களாகவும், பகுதிதலைவர்களாகவும் கடமை புரியும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் விபரங்களை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சபைக்கு தெரிவிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெற்று சேவைமூப்பு அடிப்படையில் அதிபர்களாக, பிரதி/உதவி அதிபர்களாக, பகுதி தலைவர்களாக நீண்டகாலமாக 2வது மொழி(சிங்களம்) தமிழ், சித்திரம், உளவளத்துறை ஆசிரியர்களாககடமையாற்றுபவர்கள் எவ்வித பதில் நியமன ஒழுங்குகளுமின்றி தற்போது வரையும் கடமைபுரியும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை கணிப்பீடு செய்து அத்தொகைக்கு சமனான ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்விஅமைச்சரினால் மேற்கொள்ள முடியுமா? என கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து பலகேள்விகள் கேட்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog