Breaking

Sunday

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசா யாழ் விஜயம்.

(அஷ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா்  சஜித் பிரேமதாசா  நேற்று (12) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தாா்.  அங்கு யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி மாவட்டஙக்ளில உள்ள  400 இளைஞா் யுவதிகளுக்கு நிர்மாணத்துறையில்” சில்பி சவிய” என்ற வீடமைப்பு அமைச்சின் நிர்மாணத்துறை அதிகார சபையினால்   மேசன், தச்சுத் தொழிலில் பயிற்சிஅளிக்கப்பட்டு நிர்மாணத்துறை உபகரணங்கள் அடங்கிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.



நிர்மாணத்துறையில்   ஈடுபடுத்துவதற்காக 2 மாதகால பயிற்சியளிக்கப்பட்டு அத்தொழிலை நிரந்தரமாக சுயதொழில் மூலம்   செய்வதற்காக என்.வி.கி.யு சான்றிதழும் வழங்கப்பட்டடு   இலவசமாக ஆயுதங்கள் அடங்கிய கைப்பைகள் மற்றும் நிர்மாணம் முத்திரை பொறிக்கபட்ட  சீறுடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இத்திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருத்தின் கீழ் நாடுமுழுவதிலும் 1 இலட்சம்  பேரை நிர்மாணத்துறையில் பயிற்றுவித்து இத்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்  கொடுக்கும் திட்டமாகும். 


இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவா்கள்    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  வடக்கில்   மேற்கொள்ளப்பட்டு வரும் சமட்ட செவன வீடமைப்பு கிராமங்களை நிர்மாணிப்பதற்கு ஈடுபடுத்தப்படுவாா்கள்.    இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா்  விஜயகாலா மகேஷ்வரன்  ,பாராளுமன்ற உறுப்பிணா்  மாவை சேனாதிராஜாவும் மற்றும் யாழ்ப்பாண மவாட்ட  பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா் 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog